பார்த்திபனாக மாறிய விஜய்.. இணையத்தில் லீக்கான லியோ சீக்ரெட்

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியப்போகும் நிலையில் இருக்கிறது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வரும் இப்படம் தான் இப்போது சினிமா ரசிகர்களால் அதிக அளவில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இப்படத்திற்கான மார்க்கெட் வேற லெவலில் உயர்ந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ரசிகர்களை எப்போதும் லியோ மூடுலேயே வைத்திருக்க வேண்டும் என பட குழுவும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை களமிறக்கி கொண்டிருக்கிறது. அதில் அதிகாரப்பூர்வமாக பல செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் இணையதளத்தில் பட குழுவிற்கு தெரியாமல் பல சீக்ரெட் விஷயங்கள் லீக் ஆகி கொண்டு இருக்கிறது.

Also read: 100 கோடி சம்பளம் வாங்கி சங்கத்தையே துருப்பிடிக்க வச்சிட்டீங்க.. ஆவேசத்தில் கத்திய லியோ வில்லன்

அந்த வகையில் தற்போது லியோ படத்தில் இருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறாராம். அதில் ஒன்று தான் லியோ எனவும் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபன் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் லியோ அதிரடி ஆக்சன் கதாபாத்திரமாகவும் பார்த்திபன் ரொம்பவும் சாதுவான ஒருவராகவும் இருப்பாராம். அதைத்தான் டைட்டில் அறிவிப்பிலேயே ஒரு விஜய் சாக்லேட் செய்வது போலவும் மற்றொருவர் கத்தியுடன் இருப்பது போலவும் காட்டினார்களாம். அது மட்டுமல்லாமல் அர்ஜுன் கூட இப்படத்தில் சஞ்சய் தத்துக்கு தம்பியாக வருகிறாராம்.

Also read: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்குவது உறுதி.. மிக முக்கிய தகவலால் ஆட்டம் கண்ட அரசியல் களம்

இப்படி பல ஆச்சரியமான தகவல்கள் மீடியாவில் கசிந்துள்ளது. இது தவிர ஏற்கனவே லியோ படம் பாட்ஷா படத்தின் கதையை சார்ந்தது போல் தான் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதில் ரஜினி மாணிக் பாட்ஷாவாக மும்பையில் கலக்கி இருப்பார். அதன் பிறகு சாதாரண மனிதராக மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் வேறு ஒரு இடத்தில் வாழ்வார்.

கிட்டத்தட்ட இதே போன்று தான் லியோவும் உருவாகி வருகிறதாம். இதற்கிடையில் நாம் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களும் படத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே எண்ண முடியாத அளவுக்கு நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடித்து வருகின்றனர். அதில் இப்போது விஜய்யின் கதாபாத்திரம் குறித்து வந்த தகவல் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

Also read: ரொமான்ஸுக்காக 15 மணி நேரம் தவம் கிடந்த இயக்குனர்.. பொறுப்பில்லாமல் தூங்கிய விஜய், த்ரிஷா

- Advertisement -spot_img

Trending News