பதறிப்போன பாண்டிச்சேரி, கோட் டீமுக்கு நோட்டீஸ்.. வெங்கட் பிரபுவால் விஜய்க்கு வந்த சிக்கல்

Vijay: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் உருவாகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் விஜய் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார். அதை அடுத்து தற்போது ஜெயராம் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இதன் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த நிலையில் புது பிரச்சனை ஒன்று முளைத்திருக்கிறது. அதாவது அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக பட குழு சார்பில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட காட்சியில் வெடிபொருட்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதி பெறவில்லை என கூறுகின்றனர். பொதுவாக விஜய் படங்களில் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெறும்.

கோட் படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்

அதனாலேயே வெங்கட் பிரபு இதுவரை இல்லாத அளவுக்கு காட்சிகளை படமாக்கி வருகிறாராம். அதன்படி பாண்டிச்சேரியின் பல இடங்களில் இரவு நேரத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

அதில் வெடிபொருட்களும் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த சத்தம் சுற்றி இருந்தவர்களை அதிர்வடைய வைத்திருக்கிறது. இதை அடுத்து பட குழுவின் மேல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நோட்டீஸ் விட்டுள்ளார்.

Vijay
Venkat Prabhu
H.Vinoth
Jayaram

இதற்கு முறையான விளக்கம் அளித்தால் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதாவது புதுச்சேரி விஜய்யின் வலது கையான புஸ்ஸி ஆனந்தின் ஏரியா என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் அம்மாநில முதல்வரை விஜய் சந்தித்து பேசிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. இதனால் இந்த பிரச்சனை பெரிதாகாமல் சுமூகமாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் வெங்கட் பிரபுவின் அஜாக்கிரதையால் விஜய் இப்போது இதில் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்குப் பிறகு விஜய் தளபதி 69 படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

அதை ஹச் வினோத் இயக்குவார் என்று கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வர இருக்கிறது. இந்த வருடம் இறுதிக்குள் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அப்பொழுதுதான் அவர் அடுத்த வருட தொடக்கத்தில் தன்னுடைய மக்கள் பணியை ஆரம்பிக்க முடியும். அதனாலேயே விஜய் இப்போது ரெஸ்ட் என்பதே இல்லாமல் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

கோட் படப்பிடிப்பு சம்பவங்கள்

- Advertisement -