தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியான எலக்சன் பாடல்.. கவனம் ஈர்க்கும் உறியடி விஐயகுமார்

Vijay Kumar : உறியடி என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர்தான் விஜயகுமார். இந்த படத்தை அவரே இயக்கி, நடித்திருந்தார். இளம் வயதிலேயே துணிச்சலாக அரசியலை தோலுரித்து காட்டியதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இதைதொடர்ந்து ஃபைட் கிளப் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்போது தமிழ் இயக்கத்தில் தேர்தல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் ரீச்சா ஜோஷி நடித்துள்ளனர்.

மேலும் தேர்தல் படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த சூழலில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரமாக நடந்து வரும் நிலையில் விஜயகுமாரின் பட டைட்டிலும் தேர்தல் என்ன வைக்கப்பட்டுள்ளது.

நேரத்தில் வெளியான விஐயகுமாரின் எலக்சன் பாடல்

அதோடு இந்த படத்தில் தேர்தல் பாடல் என்று வெளியாகி இருக்கிறது. நடராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயகுமார் அலைபேசி சின்னத்தில் பிரசிடென்ட்க்கு போட்டியிடுகிறார்.

இதில் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் போன்றோர் வேடமிட்டு வாக்குகள் கேட்கின்றனர். தேர்தல் நேரத்தில் என்னென்ன நடக்கும் என்பதை அப்படியே பிரதிபலிக்கும் விதமாகத்தான் இந்த பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த படத்தின் மூலம் விஜயகுமார் மீண்டும் கண்டிப்பாக சமூகத்திற்கு ஏதாவது நல்ல கருத்தை சொல்லுவார் என தெரிகிறது. மேலும் இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்