சம்பளத்திற்கு பதில் வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்.. யாரும் செய்யாததை செய்து காட்டிய ரஜினி

விஜயகாந்த் என்று சொன்னதும் நம்முடைய ஞாபகத்துக்கு வரக்கூடியது அவருடைய நடிப்பு மற்றும் அவர் செய்த நற்குணங்கள் தான். சினிமாவில் பெரிய அளவில் நடிகராக சாதித்து காட்டியவர். அதே அளவுக்கு நல்ல விஷயங்களையும் அரசியல் மூலமாக செய்து காட்ட வேண்டும் என்று மிகவும் பாடுபட்டவர். ஆனால் இவரால் அரசியலில் சேர்ந்து சாதிக்க முடியாததையும் தனிப்பட்ட முறையில் செய்து வந்தார்.

அப்படிப்பட்ட இவரால் ஒருத்தர் பாதிப்படைந்து இருக்கிறார்.  அதுவும் எப்படி என்றால் இவர் நடிப்பில் வெளிவந்த கஜேந்திரா படத்தை அவர்தான் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருக்கிறது. இதனால் அவரால் சம்பளம் கொடுக்க முடியாமல் மாட்டிக் கொண்டார். மேலும் விஜயகாந்த் வேறு வழி இல்லாமல் இவரின் சம்பள பாக்கிக்காக அவரது வீட்டை எழுதி வாங்கிக் கொண்டார்.

Also read: 5 டாப் ஹீரோக்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த ஆர். சுந்தர்ராஜன் .. கேப்டன் விஜயகாந்துக்கு விருதுகளை வாங்கி கொடுத்த படம்

அவர் வேறு யாரும் இல்லை தயாரிப்பாளர் விஏ துரை தான். இவர் பல படங்களை தயாரித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் சில படங்களில் தயாரித்து நஷ்டத்தையும் பார்த்திருக்கிறார். இவர் என்னமா கண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவிற்கு நுழைந்தார். இதனைத் தொடர்ந்து லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.

பின்பு இவருக்கு ஏற்பட்ட சிறுநீரக பிரச்சனையால் மருத்துவ செலவு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அதனால் நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு உதவி வேண்டும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு ரஜினியிடம் உதவி கேட்டிருக்கிறார். இவர் கேட்ட மாதிரியே ரஜினியும் இவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு பின்பு பயப்படவும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Also read: என் கேரியரை வளர விடாமல் தடுத்த நயன்தாரா.. ரஜினியுடன் நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட நடிகை

அத்துடன் ரஜினி, 15 வருடங்களுக்கு முன்பு இவருக்காக கல்யாண மண்டபம் மற்றும் வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் இவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது பாலா தான். அதாவது பாலா இயக்கத்தில் பிதாமகன் படம் வெளிவந்தது. இப்படத்தை எடுக்கும் பொழுது மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு பாதிப்படைந்திருக்கிறார். அது எப்படி என்றால் பாலா சொன்ன பட்ஜெட்டையும் தாண்டி அதிக செலவு செய்ததால் இவரால் அதை ஈடு செய்ய முடியாமல் ரொம்பவும் தவித்து வந்திருக்கிறார்.

அதன் பிறகும் வேறு ஒரு படத்திற்காக பாலாவுக்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்திருக்கிறார். மேலும் பிதாமகன் படத்தில் பெரிய சிக்கல் ஏற்படுத்தியதால் அட்வான்ஸ் தொகை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் அவர் கொடுத்த தொகையை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் அவர் பாலா மீது புகார் அளித்திருக்கிறார்.

ஒருவேளை விஜயகாந்த் அப்படி செய்தது அந்த நேரத்தில் சரியாக இருந்திருந்தாலும், அந்த வீட்டை மட்டும் வாங்காமல் இருந்திருந்தால் இவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கும். இவரிடம் பணம் இருக்கும் போது பெரிய பெரிய படங்களை தயாரித்து நஷ்டம் அடைந்து இருக்கிறார்.

Also read: பார்வையற்றவராக நடித்து பிரமிக்க வைத்த 5 நடிகைகள்.. குக்கூ படத்தில் கண்கலங்க செய்த மாளவிகா நாயர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்