விஜயலட்சுமி, உமாபதியை ஏமாத்திட்டாங்க.. ஒரு கோடி வாங்கியதை வெளுக்கும் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் கிடைத்தனர். நிகழ்ச்சியும் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு தரமான கண்டெண்ட் கொண்டிருந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சி ஆகா ஓகோ என கொண்டாடவில்லை என்றாலும் அதற்கான ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது குறிப்பிடத்தக்கது. அதை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்த்த ரசிகர்கள் ஏராளம். பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லாததால் பல ரசிகர்களும் சர்வைவர் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

ஆரம்பத்தில் விக்ராந்த் கண்டிப்பாக சர்வைவர் பட்டத்தை வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக அவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து உமாபதி தான் அந்த பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென விஜயலட்சுமி ஏதோ சூழ்ச்சி செய்து அந்த பட்டத்தை வென்று விட்டது போல பிம்பம் உருவாகி விட்டது.

இப்போது அதைத்தான் சமூக வலைதளங்களில் வசை பாடி வருகின்றனர். உமாபதியை நடிகை விஜயலட்சுமி ஏமாற்றி ஒரு கோடி பரிசை தட்டிச் சென்று விட்டதாகவும் இதை உழைத்து வாங்கி விட்டேன் என்று சொல்ல வேண்டாம் எனவும் அவரை சமூக வலைதளங்களில் விரட்டி விரட்டி அடித்து வருகின்றனர்.

இதை கவனித்த விஜயலட்சுமி உடனடியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உமாபதி பற்றியும் அவருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையிலான பஞ்சாயத்து பற்றியும் ஒரு வீடியோ ஒன்றை பேசி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sole-survivor-vijayalaxmi
sole-survivor-vijayalaxmi
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்