பெண்களின் குறையை கேட்டு அரண்டு போன கேப்டன் வாரிசு.. இத செஞ்சா விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையுமாம்

Captain Vijayakanth: கேப்டனின் இரண்டு வாரிசுகளும் தற்போது தங்கள் துறைகளில் பிஸியாக இருக்கின்றனர். அதில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலை கையில் எடுத்துள்ளார்.

அதேபோன்று சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் படை தலைவன் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த பிசியான நிலையிலும் அவர் தன்னுடைய அண்ணனுக்காக வாக்கு சேகரிக்க களம் இறங்கியுள்ளார். அதன்படி விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

அதே தொகுதியில் பாஜக சார்பாக ராதிகாவும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். இதனாலேயே அது மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக உள்ளது.

இந்த சூழலில் முதல் முறையாக பிரச்சாரம் செய்ய வந்த சண்முக பாண்டியன் பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் என் அப்பாவை ஜெயிக்க வைக்கவில்லை என வருத்தப்படுகிறீர்கள்.

பிரச்சாரம் செய்ய வந்த சண்முக பாண்டியன்

ஆனால் என் அண்ணன் அப்பா சாயலில் இருக்கிறார். அவர் ஜெயித்தால் கேப்டன் ஆத்மா சாந்தி அடையும் என பேசினார்.

உடனே அங்கிருந்த பெண்கள் நீங்கள் ஜெயித்தால் தங்கம் விலையை குறைக்கணும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அரண்டு போன அவர் அண்ணன் பதவிக்கு வந்தால் டெல்லியில் இது குறித்து பேசுவார் என எப்படியோ சமாளித்தார்.

அதன் பிறகு அவர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது உடன் இருந்தவர்கள் அனைவருக்கும் இளநீர் வாங்கி கொடுத்து கேப்டன் வாரிசு என்பதையும் நிரூபித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்