புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜயகாந்த் அரசியலுக்கு தூபம் போட்ட இயக்குனர்.. இவர் ஏத்தி விடலனா மனுஷன் உசுரோட இருந்திருப்பாரு

Vijayakanth entered into politics reason for director rkselvamani: நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் செய்யும் மேஜிக் தான் இந்த அரசியல். இந்த மேஜிக் அரசியலில் எடுபடாவிட்டால் நல்லது செய்யும் மனிதர்களை சிதைத்து சின்னபின்னாமாக்கிவிடுகிறது.

நல்லது செய்வதற்காக தான் அரசியலை தேர்ந்தெடுக்கின்றனர் ஆனால் அந்த அரசியல் அவரை அரசியல்வாதியாக்கி விடுகிறது. முதல்வன் படத்தில் அர்ஜுன் இறுதியாக ரகுவரனை துப்பாக்கியால் சுட்டு விட்டு “என்னையும் அரசியல்வாதியா ஆக்கிட்டீங்களேடா” என்று கதறுவார்.

விஜயகாந்த் அவர்கள் இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். நடிகர் சங்க தலைவராக இருந்து சங்கத்தின் கடன் முழுவதையும் அடைத்து காட்டி சாதனை புரிந்தவர். அவர் அரசியலுக்கு வந்தது எதற்காக?

Also Read: விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி

திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து கதை கூறி கவர்ந்த ஆர் கே செல்வமணிக்கு முதல் படமான புலன் விசாரணைக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். அடுத்ததாக இணைந்த இந்த ஜோடி கேப்டன் பிரபாகரனில் வெள்ளி விழாவை கண்டனர்.

ஆர்கே செல்வமணி அவர்கள் நார்மலாகவே தேசியம், நதிநீர் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி முல்லைப் பெரியாறு என பல பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார்.  மேலும் அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கத்தையும் இப்பிரச்சனைக்காக விஜயகாந்த்திடம் கூறி குரல் கொடுக்க வைத்து விடுவார்.

விஜயகாந்தின் தலைமையில் நடிகர்கள் அனைவரும் மேற்கூறிய பிரச்சனைகளுக்காக இறங்கி போராட ஆரம்பித்தனர்.  இதுவே நாளடைவில் அவரது அரசியல் சாம்ராஜ்யத்திற்கு அச்சாரமாக அமைந்தது. செல்வமணி தனது மனைவி நடிகை ரோஜாவையும் அரசியலில் ஈடுபட வைத்து பக்க பலமாக இருந்து வருகிறார். அவரும் தற்போது ஆந்திராவில் அமைச்சராக உள்ளார்.

விஜயகாந்தின் மறைவு குறித்து ஆந்திராவின் அமைச்சர் நடிகை ரோஜா அவர்கள் என் கணவருக்கு வாழ்க்கை கொடுத்தவர், சமூக சேவகர், எங்களுக்கு கடவுள் மாதிரி” அவர்களின் இறப்பை எங்களால் ஜீரணிக்க இயலவில்லை என்று வேதனையுடன் பகிர்ந்து இருந்தார்.

Also Read: விஜயகாந்த்க்கு ஜோடி போட்டு அரசியலில் ஆட்டம் கண்ட 6 நடிகைகள்.. கமலுக்கு குடை பிடிக்கும் ஹீரோயின்

- Advertisement -

Trending News