எடுத்து வைங்கடா தேசிய விருத.. பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டு சேரும் விஜய்

தளபதி விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எந்த கூட்டணியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களோ அது விரைவில் நிறைவேறி விடும் என்கிறது கோலிவுட் வட்டாரம். அதையும் அந்த இயக்குனரே உறுதி செய்துவிட்டார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நடிகராக வலம் வருபவர் விஜய். சமீபகாலமாக விஜய்யின் படங்களின் தயாரிப்பு செலவு மட்டுமே ரூ 100 கோடியை அசால்டாக தாண்டி வருகிறது. மேலும் விஜய்யின் சம்பளமே 100 கோடியைத் தொட்டுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் தொடங்க உள்ளது. இதற்காக லொகேஷன் பார்க்க சென்ற புகைப்படங்களை நெல்சன் திலீப்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 66, தளபதி 67 போன்ற படங்களைப் பற்றிய செய்திகள் தளபதி 65 படத்தை விட அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக தளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் தான் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

அது விரைவில் நிறைவேற உள்ளது என்பதை வெற்றிமாறன் சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். வெற்றிமாறன் தற்போது சூரி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஆர்எஸ் இன்போடைமண்ட் என்ற நிறுவனத்திற்காக தனுஷுடன் ஒரு படம், கலைப்புலி எஸ் தாணு சூர்யா கூட்டணியில் வாடிவாசல் போன்ற படங்களை இயக்கி முடித்துவிட்டு விஜய் படத்திற்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

vijay-vetrimaran-cinemapettai
vijay-vetrimaran-cinemapettai

அனேகமாக விஜய் வெற்றிமாறன் கூட்டணி 2023 ஆம் ஆண்டு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். கண்டிப்பாக விஜய் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவரும் படம் இதற்கு முன்னர் இருந்த வசூல் சாதனைகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -