ஏப்ரல் மாதம் தொடங்குகிறது விஜய் கொடுக்கும் விருந்து.. GOAT ட்டில் தலயை இழுத்துவிட்ட வெங்கட்பிரபு!

Vijay will give more treat about GOAT Movie in April: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் பிஸியாக உள்ளார்.   

இதுவரை இல்லாத அம்சத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சயின்ஸ் பிக்சன் மற்றும் ஆக்சன் கதையில் நடித்து வருகிறார் தளபதி.

கிளைமாக்ஸ் காட்சி கேரளாவில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கோட் பட குழுவினர் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளனர்.

தமிழக அரசியலில் கால் பதித்திருப்பதால் இவரது படங்கள் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வருகிறது. தினம் தினம் புது புது அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை  கொண்டாட வைத்து வருகிறார் விஜய்.

ஏப்ரல் 14 அன்று வெளிவர இருக்கும் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

அதன்படி விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், லைலா, ஜெயராம், மோகன், அஜ்மல், வைபவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும்,

கோட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 14 அன்று வெளியிடப் போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அது மட்டும் இன்றி தளபதியின் பிறந்த நாளான ஜூன் 22 இல் கோட் படத்தின் டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளனர். 

விரைவில் படப்பிடிப்பை முடித்து ஆகஸ்ட் 15க்குள் கோட் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், தாமதிக்கும் பட்சத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறு புது புது அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை ஹைப்யை ஏற்றி வருகிறார் தளபதி. 

மற்றொரு சிறப்பம்சமாக மங்காத்தா படத்தை போன்று  கெத்தான தரமான தீம் மியூசிக் ஒன்று தளபதிக்கு போடப்பட்டுள்ளதாம். இதில் விஜய் ஒரு  பாடல் ஒன்றும் பாடியுள்ளார்.

மேலும் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேரளாவில் மைதானத்தின் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் உடன் கிரிக்கெட் ஜாம்பவான் CSK தல தோனியும் சில காட்சிகளில் நடித்து உள்ளாராம். இந்த தகவலை பட குழு ரகசியமாய்  வைத்துள்ளனராம்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்