அந்த ரெண்டு நடிகைகளுடன் தொடர்பு, சங்கீதாக்கு எல்லாம் தெரியும்.. சீண்டி பார்க்கும் வில்லங்கமான பிரபலம்

Vijay: சமீப காலமாக விஜய் பற்றிய சர்ச்சை செய்திகள் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தற்போது அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த சர்ச்சை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

அதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷாவுடன் இவருக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக வெளிப்படையாகவே மீடியாவில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி விஜய் தன் மனைவியை விட்டு பிரிந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் விஜய் குடும்பம் பற்றி மிகவும் அவதூறாக பேசியிருக்கிறார். அதாவது விஜய் எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தாலும் அவருடைய மனைவிக்கு கவலை இல்லை.

பாண்டியனின் அவதூறு பேச்சு

ஏனென்றால் சினிமாவில் இதெல்லாம் சகஜம். ஆனால் சம்பாதிக்கிற பணம் வெளியே போக கூடாது என்பதில்தான் சங்கீதா குறியாக இருக்கிறார். ஆக மொத்தம் விஜய் திரிஷா, கீர்த்தி சுரேஷ் உடன் தொடர்பில் இருப்பது அவருக்கு தெரியும் என்பது போல் பேசி இருக்கிறார்.

இதுதான் தற்போது கடும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. ஏனென்றால் சமீபத்தில் திரிஷா குறித்து ஒரு விஷயத்தை பேசியதற்காக மன்சூர் அலிகானை மொத்த திரையுலகமும் வச்சு செய்தது.

மேலும் அரசியல் பிரபலம் ஒருவர் திரிஷா பற்றி பேசியதற்காக நடவடிக்கை கூட எடுக்கப்பட்டது. ஆனால் பாண்டியன் தொடர்ந்து நடிகைகளை பற்றி மோசமான விஷயங்களை பேசி வருகிறார்.

அவரை யாரும் கேள்வி கேட்காதது ஏன்? இவர் மீது சட்டரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இதை எப்படி ஊடகங்கள் அனுமதிக்கிறது என்ற கேள்விகள் ரசிகர்கள் தரப்பில் எழுந்து வருகிறது.

ஆனால் எல்லாமே அரசியல் பின்னணி தான். அதனால் தான் இவ்வளவு தைரியமாக பிரபலமாக இருப்பவர்களை பற்றி இவர்கள் பேசுகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்டவர்களும் இதை கண்டு கொள்ளாமல் நகர்ந்து விடுகின்றனர்.

சர்ச்சையில் சிக்கும் விஜய்

- Advertisement -