புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யாருமே எதிர்பார்க்காமல் தளபதி68-ல் வந்த 2 நடிகர்கள்.. தேடி போய் வாய்ப்பு கொடுத்த விஜய்

Vijay in Thalapathy68: எப்போதுமே முன்னணி நடிகர்கள் மாஸ் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே வந்தால் ரொம்பவே போர் அடித்து விடும். அதனாலயே சும்மா ரிலாக்ஸேசனுக்கு ஒரு படம் பண்ணலாமே என்று முடிவு பண்ணி அதற்கேற்ற இயக்குனரிடம் கூட்டணி வைத்து விடுவார்கள். அப்படித்தான் தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ரொம்பவே மாசாக நடித்து விட்டார்.

அதனால் தற்போது வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் இப்படத்திற்கு நேற்று பட பூஜை போட்டு துவங்கி விட்டார்கள். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. அத்துடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார்.

பொதுவாக வெங்கட் பிரபு என்றாலே அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இருப்பார். அதே மாதிரி தளபதி 68 படத்திலும் யுவன் அவருடைய கைவரிசையை காட்டப் போகிறார். மேலும் இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, யோகி பாபு, அஜ்மல் அமீர் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கப் போகிறார்கள்.

அத்துடன் வழக்கம்போல் வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய படங்களில் அவருக்குன்னு இருந்த ஒரு கேங்கையும் இதில் கூட்டிட்டு வருகிறார். அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டு நடிகர்களும் சேர்ந்து இருக்கிறார்கள். இதில் ஒரு நடிகருக்கு விஜய்யை தேடிப் போய் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

அவர்தான் விடிவி கணேஷ்.இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் என்று விஜய், வெங்கட் பிரபுவிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறார். அத்துடன் வெங்கட் பிரபு கதையை கூட இல்லாமல் படம் எடுப்பார் ஆனால் இவருடைய தம்பி பிரேம்ஜி இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார். அதனாலயே தளபதி 68 படத்திலும் பிரேம்ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

இவர்களை தொடர்ந்து வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் போன்ற நடிகர்களும் நடிக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் வெங்கட் பிரபு அவருடைய ஸ்டைலில் தான் படத்தை எடுக்கப் போகிறார் என்பது இந்த நடிகர்களை வைத்து தீர்மானிக்க முடிகிறது. இதனால் விஜய் படத்திற்கு எந்தவித கலவரமும் ஏற்படாமல் இந்த படம் வரப்போகிறது.

- Advertisement -

Trending News