3 அரசியல் கட்சிகளால் அல்லோலபட்ட விஜய்.. ஒவ்வொரு பிரச்சனையும் சமாளிக்க படாத பாடுபட்ட தளபதி

தளபதி விஜய் தற்போது இவ்வளவு பெரிய உயரத்தை அடைய ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் பெற்றார். இப்போது ஒரு படத்திற்கு 180 கோடி முதல் 200 கோடி வரை சம்பாதித்தாலும் பல பிரச்சனைகளைத் தாண்டி தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது வரை சிலர் அவருக்கு குடைச்சல் கொடுத்து தான் வருகிறார்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் எல்லாம் சமாளித்து தான் தனது படங்களை விஜய் வெளியிட்டு வருகிறார். சினிமாவில் உள்ளவர்களை தாண்டி அரசியல் கட்சிகளில் இருந்தும் விஜய்க்கு நிறைய குடைச்சல் வந்துள்ளது. அவ்வாறு விஜய் சந்தித்த மூன்று அரசியல் கட்சியின் பிரச்சனைகளை பார்க்கலாம்.

Also Read : சிம்பு மீது காண்டான அஜித், தனுஷை வைத்து போடும் பக்கா பிளான்.. விஜய்யின் வாரிசு படத்தால் வந்த வம்பு

விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தின் டைட்டில் இருந்த பிரச்சனை தொடங்கியது. அதாவது இந்த படத்தின் டைட்டில் டேக் லைனில் டைம் டு லீட் என கொடுக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததால் இந்த கட்சிக்கு எதிராக விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அரசல் புரசலாக பேச தொடங்கினர்.

இதனால் அப்போது உள்ள அதிமுக கட்சியினர் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தனர். இதற்காக விஜய் மற்றும் அவரது தந்தை இருவரும் கோடநாடு வரை சென்றும் பயனில்லை. அதன் பின்பு டைம் டு லீட் என்ற வார்த்தையை எடுத்த பிறகுதான் படத்தை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து சர்க்கார் படத்திலும் தேர்தலை மையப்படுத்தி எடுத்திருந்ததால் பிரச்சனை வெடித்தது.

Also Read : ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய் செய்த காரியம்.. துணிவை ஜெயிச்சே ஆகனுமாம்

மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து கொண்டிருக்கும்போது பிஜேபினரால் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதனால் விஜய் படப்பிடிப்பு தளத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் விஜயின் கத்தி படத்தில் 2ஜி போன்று திமுகவுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றது. அப்போது இக்கட்சியினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்போது உதயநிதியால் விஜயின் வாரிசு படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாட்டு தியேட்டர்களில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய பிரச்சனை செய்து வருகிறாராம்.

Also Read : 100 கோடி வசூலை பார்த்தவுடனே விஜய்யுடன் கூட்டணியா? யாரும் எதிர்பார்க்காத மெகா காம்போ