தில் ராஜுவை நம்பி மோசம் போன விஜய்.. வைரலாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தில் ராஜ். சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே தில் ராஜு மேடைகளில் சர்ச்சையான விஷயங்களை பேசி உள்ளார்.

இதனால் தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். வாரிசு படத்தின் வசூல் பாதிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு தமிழ் சினிமா போல மற்ற மொழி ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். அதுவும் தெலுங்கில் அதிக ரசிகர்கள் விஜய்க்கு உள்ளனர்.

Also Read : இப்ப வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.. நம்பி மோசம் போயிட்டோமே!

அதுமட்டுமின்றி வாரிசு படம் தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு கூட்டணியில் உருவானதால் தமிழ் சினிமாவை காட்டிலும் அங்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஆகையால் வாரிசு படத்தின் மூலம் தெலுங்கில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜய்யின் முந்தைய படமான மாஸ்டர் தெலுங்கில் செய்த வசூலை விட வாரிசுடு செய்த வசூல் மிகவும் குறைவு தான் என ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் வாரிசு படம் மூலம் டோலிவுட்டில் விஜய்யின் மார்க்கெட் உயரவில்லை என்பதை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : மீண்டும் ஓடிடி-யில் மல்லுக்கட்டும் வாரிசு, துணிவு.. ஒரே நாளை குறி வைத்த அமேசான், நெட் பிளிக்ஸ்

இப்போது ப்ளூ சட்டை மாறனின் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தெலுங்கு ரசிகர்களை கவர வேண்டும் என தில் ராஜுடன் கூட்டணி போட்டு மோசம் போய் உள்ளார் என ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும் வாரிசு படத்தை தனியாக வெளியிட்டால் கூட ஓரளவு நல்ல லாபத்தை பெற்றிருக்க முடியும்.

ஆனால் தில் ராஜு துணிவுக்கு போட்டியாக வெளியிட்டு அவமானத்தை சந்தித்துள்ளார். போனது போகட்டும் என தற்போது விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கண்டிப்பாக இது ஒரு மாஸ் ஹிட் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

blue-sattai-maran

Also Read : வாரிசு 210 கோடி சாத்தியமா? 50 கோடிக்கு மேல் துணிவை வீழ்த்திய விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்