முட்டா பீசுகளையும், முரட்டு பீசுகளையும் வச்சி விழி பிதுங்கும் விஜய்.. அரசியலுக்கு செல்லா காசாகும் ரசிகர்கள்

Vijay – தளபதி அவர் ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவுல நல்ல இடத்துக்கு வந்து இப்போ அரசியல் கட்சியும் தொடங்கிட்டாரு. எம்ஜிஆர், விஜயகாந்த் அப்புறம் பெரிய ஹீரோ கட்சி ஆரம்பிக்கிறது விஜய் மட்டும் தான். கமல் ஆரம்பித்தாலும் இவங்க லிஸ்டில் அவர் வர மாட்டாரு. காரணம் இவங்க ஆரம்பிச்சது எல்லாம் ரசிகர்களை நம்பி.

எம்ஜிஆருக்கு சரிசமமா இப்போ அதிக ரசிகர்களை கையில் வைத்திருக்கிறார் விஜய் அதை நம்பி தான் தைரியமாக அரசியல்ல இறங்குகிறார். எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் விஜய் ரசிகர்களின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன. இதற்கு முன்பு வந்தாலும் அது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

முட்டாள் ரசிகர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வார் விஜய்

சினிமாவில் ஹீரோவுக்காக ரசிகர்கள் முட்டாள்தனமா பல விஷயங்கள் செய்வாங்க அதை பேச்சோடு போய்விடும். ஆனால் இப்போ விஜய் அரசியல் சம்பந்தமா பல விஷயங்களை செஞ்சிட்டு வராரு இதுல அவங்க ரசிகர்கள் பண்ற கூத்து பேசும் பொருளாக மாறி விஜய்க்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு சமீபத்தில் நடந்த சில உதாரணங்கள்.

வாரிசு படத்தின் டிரைலர் வெளியிட்டு ரோகிணி தியேட்டர்ல வெளியிட்டு இருந்தாங்க ரசிகர்கள் அந்த தியேட்டர் சூறையாடிட்டாங்க. அப்பவே இவர் அரசியலுக்கு வரப்போறாரு ரசிகர்களை ஏதும் கேள்வி கேட்க மாட்டாரா என்று பேச தொடங்கிவிட்டனர். அப்போது கூட விஜய் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

இந்த சமயத்தில் அரசியல் கட்சி தொடங்கினார் அரசியல் கட்சியில் தனது ரசிகர்களை பல பொறுப்புகளுக்கு உட்படுத்தினார். இவர்கள் அனைவரும் டிவியில் பேச ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது ரசிகர்களின் அறிவு நன்றாக தென்பட்டது இவ்வளவு மோசமாக வா பேசுவார்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வந்தார்கள். இதுல புஸ்ஸி ஆனந்த் பண்ற வேலைகள் வேற.

இப்ப சமீபத்துல கேரளா போனார் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடியது. நம்ம தமிழ்நாட்டு ரசிகர்கள் தான் இப்படி பார்த்தா கேரளா ரசிகர்கள் அதுக்கு மேல போய் விஜய சூழ்ந்து விஜய் கார நசுக்கிட்டாங்க.

இது எல்லாமே சினிமாவோட போனா பேசும் பொருளாக மாறாது இது அரசியல் ஓட பார்க்கும் போது இந்த மாதிரி முட்டாள் ரசிகர்களை வைத்துக்கொண்டு கண்டிப்பாக விஜய் முதல்வராக முடியாது. இது எல்லாம் விஜய் சரி பண்ண வேண்டும் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை