மாஸ்டர் பிளான் போட்ட விஜய்.. சைலன்டாக நோட்டமிடும் ரஜினி, பற்றி எரியும் பிரச்சனை

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் ரஜினி இன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ரஜினியை வைத்து பிரபலமாகும் பல நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அதிலும் அவருடைய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடிப்பதற்கு பல போட்டிகள் நடந்து வருகிறது.

அதிலும் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு தான் பொருந்தும் என்று பரவி வரும் பேச்சு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் கொதித்துப் போன ரஜினி ரசிகர்கள் அவருக்கு எதிராக பல எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Also read: சுயநலமாக பக்கா பிளான் போட்ட தில் ராஜு.. அக்கட தேசத்தை பகைச்சிக்க முடியாது நண்பா

அது மட்டுமல்லாமல் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு ரசிகர்களிடம் நன்றாக வங்கி கட்டிக் கொண்டார். இப்படி இந்த விவகாரம் பற்றி எரிந்து கொண்டு வரும் நிலையில் இதை ரஜினி தரப்பும் சைலன்டாக நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதாம்.

ஆரம்பத்தில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி எல்லாம் பேசி வருகிறார்கள் என்று நினைத்தவர்கள் அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக விசாரித்து பார்த்திருக்கிறார்கள். ஏனென்றால் இப்படி ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கும் நிலையில் விஜய் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இதுவும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் ரஜினியின் வட்டாரம் இந்த விஷயத்தை கூடுதல் கவனத்துடன் விசாரித்து இருக்கிறார்கள்.

Also read: ரஜினியே அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என கூறிய ஒரே நடிகர்.. தலைமையை வாரிக் கொடுத்த தலைவர்

அதில் தான் பல விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது. அதாவது இந்த சூப்பர் ஸ்டார் விவகாரம் விஜய்க்கு தெரிந்து தான் நடக்கிறதாம். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவருக்கு மாற்றும் வேலைகளும் சைலன்டாக நடந்து வருகிறதாம். இவை அத்தனையும் விஜய் தரப்பின் ஏற்பாட்டினால் நடந்து வருவதை பார்த்த ரஜினியின் வட்டாரம் தற்போது கடுமையான கோபத்தில் இருக்கிறதாம்.

அதனால் ரஜினி எப்போது வேண்டுமானாலும் இந்த விவகாரம் பற்றி வாய் திறக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஏற்கனவே விஜய்க்கு சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பல செய்திகள் வெளிவந்தது. அது வாரிசு விழாவிலும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. தற்போது இது ரஜினியின் கவனத்திற்கும் சென்றிருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய திரையுலகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: 3 சூப்பர் ஸ்டார்கள் உடன் உருவாகும் ஜெயிலர்.. உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -