யாரையும் விட்டுக் கொடுக்காத விஜய்.. விசில் போடு பாடலால் தளபதிக்கு ஆப்பு ரெடி!

Vijay who doesn’t give up on anyone but complaint against vijay goat song: திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் அஞ்சா நெஞ்சனாக அரசியலில் கால் பதித்து அபார வளர்ச்சி பெற்று வருகிறார். 

பல அதிரடியான முடிவுகளால் தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் தளபதி இன்னும் ஒரு படம் மட்டும் முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார்.

 2026 இல் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தளபதி 2025 ஆண்டுக்குள், தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்த போவதாக முன்னரே அறிவித்துவிட்டார்.

இதனால் இவரது படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றது. சமீபத்தில் இவர் நடிக்கும் கோட் திரைப்படத்தின் விசில் போடு பாடலை தமிழ் புத்தாண்டு சிறப்பாக ரிலீஸ் செய்தது படக்குழு.

விசில் போடு பாடல் லியோ மற்றும் பீஸ்ட் படத்தின் அரபிக் கூத்து ஓப்பனிங் சாங்ஸை விட பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்து வருகிறது. 

முன்னணி நடிகர்கள் படத்தின் ஓபனிங் சாங் இல் அதிகம் கவனம் செலுத்துவதுண்டு.  வெங்கட் பிரபு இந்தப் பாடலுக்கு விஜய்க்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்த போதும், அனைவரும் ஆடட்டும் என்று தன்னுடைய கோஸ்டார்ஸ் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் என அனைவரையும்  ஆடச் சொல்லி கட்டளையாம்.

பிரபுதேவா விஜய்யை  ஓவர் டேக்  பண்ணி விடுவார் என்று எல்லோருக்கும் தெரியும் அப்படி இருந்தும் விஜய் எல்லோரும் ஆடணும்னு ஆர்டர் போட்டு இருக்கிறார்

 எந்தவித இகோவும் இல்லாமல் கம்யூனிச கொள்கையை படத்தில் கூறுவது மட்டுமல்லாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து, தனக்கு கிடைக்கும் புகழில் அவர்களையும் சேர்த்துக் கொண்டார் என்றே கூறலாம்.

விசில் போடு பாடலால் விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி

இதற்கு அடுத்தபடியாக இப்பாடல் பற்றிய புகார் ஒன்று காவல்துறையினருக்கு ஆன்லைன் மூலமாக சென்றுள்ளது. 

விஜய் இப்பாடலில் விழிப்புணர்வு வாசகங்கள் ஏதும் இடம் பெறாமல் பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்று கலவரத்தை உண்டாக்கும் வகையிலும், மதுவை ஆதரிக்கும் வகையிலும் பாடலின் வரிகள் அமைந்துள்ளது என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “இடி இடிச்சா என் வாய்ஸ்! வெடி வெடிச்சா என் பாய்ஸ்” என்பன போன்ற அதிரடியான வாசகங்களும், மைக்கை எடுக்கட்டுமா? ரத்தம் பத்தட்டும்! விசில் போடு! நண்பா நம்பி விசில் போடு என்று வெறியை தூண்டும் வகையில் இவரது பாடல்கள் அமைந்துள்ளது என்பது போன்ற செய்திகளை உள்ளடக்கி புகார் ஒன்றை காவல் துறையினருக்கு அனுப்பியுள்ளனர்.

இது எந்த அளவுக்கு சீரியஸாக மாறும் என்பது புரியாத புதிர் தான்! ஆனால் இவை எதையும் தளபதி கண்டு கொள்வதாக இல்லை. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! என்று கடந்து போய்க் கொண்டிருக்கிறார். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்