அஜித், அர்ஜுன், விக்ரம், மாதவன், விஷால் கேரியரை புரட்டி போட்ட விஜய்.. கேம் சேஞ்சராக இருந்த தளபதி

நடிகர் விஜய் இப்போ இருக்கும் முக்கிய ஹீரோக்களின் சினிமா கேரியரில் கேம் சேஞ்சராக இருந்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அஜித், அர்ஜுன், விக்ரம், சூர்யா போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு சினிமாவில் பெரிய பிரேக் கொடுத்த சில படங்கள் இருக்கின்றன.

அப்படிப்பட்ட படங்களின் கதை முதலில் விஜய்க்கு தான் போயிருக்கிறது. அவர் ரிஜெக்ட் செய்த பின் அந்த கதைகளில் நடித்த இவர்களின் சினிமா வாழ்க்கை மொத்தமாக மாறி இருக்கிறது. அப்படி அப்படி விஜயின் கேமிங் சேஞ்சால் சினிமாவில் பெரிய திருப்புமுனையைப் பெற்ற 10 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

கேம் சேஞ்சராக இருந்த தளபதி

சூர்யா: நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில் ஆரம்ப காலத்தில் வெற்றி படங்கள் என்று எதுவுமே கிடையாது. ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். விஜய் செய்த ஒரு படம் இல்லை, மொத்தம் மூன்று படம் சூர்யாவுக்கு பிரேக்கிங் படமாக அமைந்திருக்கிறது. உன்னை நினைத்து, காக்க காக்க, சிங்கம் போன்ற படங்கள் எல்லாம் விஜய்க்கு முதலில் சொல்லப்பட்ட கதைகள் தான்.

அர்ஜுன்: இயக்குனர் சங்கர் முதல்வன் படத்தின் கதையை முதலில் ரஜினிக்கு தான் சொன்னார். ஆனால் அரசியல் விமர்சனம் இருப்பதால் ரஜினி அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து இந்த கதை விஜய்க்கு தான் போனது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை. இந்த முதல்வன் படம் நடிகர் அர்ஜுனனின் சினிமா கேரியரில் பெரிய அடையாளத்தை கொடுத்தது.

தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இந்த பட கதை முதலில் விஜய்க்கு தான் சொல்லப்பட்டது. ஆனால் கடைசியில் அது தனுஷின் கைக்கு வந்து சேர்ந்து இருக்கிறது.

கார்த்தி: கடந்த சில வருடங்களாகவே நடிகர் கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது. இப்போதைக்கு அவருடைய சினிமா கேரியரில் பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். இதில் வந்தியத்தேவன் கேரக்டரில் தான் கார்த்தி நடித்திருப்பார். இந்த கேரக்டரில் விஜய் நடிக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் முதல் சாய்ஸ் ஆக இருந்திருக்கிறது.

விஷால்: நடிகர் விஷால் அறிமுகமான செல்லமே படம் ஒரு டீசன்டான வெற்றி படம். அதை தொடர்ந்து அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் காட்டியது சண்டக்கோழி படம் தான். இந்த படத்திற்கான கதையை முதலில் லிங்குசாமி நடிகர் விஜய்க்கு தான் சொல்லி இருக்கிறார். ஆனால் கால்ஷீட் பிரச்சினைகளால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

சேரன்: பொற்காலம், பாண்டவர் பூமி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் சேரன். இவர் நடித்து பெரிய அளவில் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் ஆட்டோகிராப். இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். ஒரு சில காரணங்களால் விஜய் இது போன்ற ஒரு ஸ்கிரிப்டில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் சேரன் இப்போது ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாதவன்: அலைபாயுதே படத்தின் மூலம் சாக்லேட் ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகைகளை கவர்ந்தவர் தான் மாதவன். இயக்குனரின் மாதவனை முதன்முதலாக ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க வைக்க லிங்குசாமியின் முதல் சாய்ஸில் இருந்தவர் விஜய் தான்.

கார்த்திக்: நவரச நாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்தவர் கார்த்திக். அவருடைய மார்க்கெட் டல் அடித்தபோது அவரை தூக்கி விட்ட படம் தான் உள்ளத்தை அள்ளித்தா. ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். இன்றுவரை இந்த கதையில் விஜய் மற்றும் கவுண்டமணி காம்போ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என ஏங்கும் ரசிகர்களும் உண்டு.

அஜித்: விஜய் நோ சொன்ன ஸ்கிரிப்டில் அஜித் நடிப்பது என்பது ரொம்பவும் அரிதான விஷயம். அப்படிப்பட்ட படம் தான் தீனா. இந்த படத்தின் கதையை முதலில் முருகதாஸ் விஜய்க்கு தான் சொன்னார். ஒரு சில காரணங்களால் விஜய் இந்த படத்தை ரிஜெக்ட் செய்த பிறகு அஜித் அந்த படத்தில் நடித்த பெரிய வெற்றி பெற்றது.

விக்ரம்: சாமி, தில், தூள் என விக்ரம் ஆக்சன் ஹீரோவாக அடித்து நொறுக்கி கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த லிஸ்டில் தூள் படத்தில் நடிக்க இருந்தது விஜய் தான். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் இந்த கதை விக்ரமுக்கு போனது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்