கையில் காயத்துடன் வந்து வாக்களித்த தளபதி விஜய்.. பதறிப் போன பேன்ஸ்

Vijay : இன்று சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாக்களித்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது தளபதி விஜய் எப்போது வாக்களிப்பார்.

ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் முதல் முறையாக தலைவராக வாக்களிக்கிறார். மேலும் இப்போது விஜய் வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தது.

இன்று காலை சென்னை திரும்பிய விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அவருடைய வீட்டில் இருந்தே வாக்குச்சாவடி வரை மீடியா மற்றும் ரசிகர்கள் என கூட்டம் அலைமோதியது.

கையில் காயத்துடன் வாக்களித்த விஜய்

vijay-voting
vijay-voting

அதுவும் கூட்ட நெரிசலில் விஜய் வந்து வாக்களித்துள்ளார். மேலும் விஜய்யின் இடது கையில் காயம் இருப்பது அவரது விரலில் மையை வைக்கும் போது புகைப்படத்தில் தெரியவந்துள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோட் படப்பிடிப்பில் விஜய்க்கு விபத்தா?

vijay
vijay

அதாவது கோட் படப்பிடிப்பில் விஜய்க்கு ஏதாவது விபத்து நடத்து உள்ளதா என்றும் வினவி வருகின்றனர். ஆனால் புகைப்படத்தை பார்க்கும் போது இது சிறிய காயம் போல் தான் தெரிகிறது. ஆகையால் பெரிதாக எதுவும் நடந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான்.

மேலும் இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவராக வாக்களித்த விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அதில் வேட்பாளராக விஜய் வாக்களிக்க இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்