கேமுக்காக ஒரு பொண்ண எப்படி வேணாலும் நாறடிப்ப.. ஓட்ட வாயை வச்சு செய்யும் விஜய் வர்மா

Biggboss 7: நேற்று முழுவதும் நிக்சன், அர்ச்சனாவின் சண்டை பரபரப்பை கிளப்பி பிக்பாஸ் வீட்டை ரத்த பூமியாக மாற்றி இருந்தது. அதை தொடர்ந்து இன்று கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் பல ரகசியங்களை அம்பலமாக்கி வருகிறது.

அதன்படி ஐந்து கோல்ட் ஸ்டார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சொந்தமாக்கி கொள்வதற்காக போட்டியாளர்கள் தனக்காக பேச வேண்டும். இல்லை என்றால் மற்றவர்களுக்கு போய்விட கூடாது என பேச வேண்டும். இதுதான் இந்த ஜாக்பாட் டாஸ்க்கின் விதிமுறை.

Also read: பெண்ணியமா பேசுற, இப்ப பாரு ஆன்ட்டி.. தொக்காக சிக்கிய மாயாவுக்கு ஆப்படிக்க போகும் அர்ச்சனா

அதில் விஷ்ணு உங்க கருத்து முரண்பாடா இருக்குது என விசித்ராவை பார்த்து கூறுகிறார். அதை தொடர்ந்து விஜய் வர்மா, விஷ்ணு பேசிய பழைய பஞ்சாயத்தை போட்டு உடைக்கிறார். அதாவது இரண்டாவது வாரத்தில் பூர்ணிமாவை இவல்லாம் ஒரு பொண்ணா? அடுத்த வீட்டுக்கு போய் என்னடா பண்ணுவா என விஷ்ணு பேசியதை ஓப்பன் செய்கிறார்.

மேலும் நீ உன்னோட கேமுக்காக ஒரு பொண்ண எப்படி வேணும்னாலும் நாறடிப்ப. இந்த மாதிரி ஒரு ஆள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியே கிடையாது என்று சொல்கிறார். அதை தொடர்ந்து விஷ்ணுவும் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

Also read: மாயாவை விடாமல் துரத்தும் பூர்ணிமா.. புது பிளான் போடும் பிக்பாஸ் மூவேந்தர் அணி

உண்மையில் விஷ்ணு ஓட்ட வாய் போல எப்பயோ நடந்த விஷயத்தை தனக்கு தேவையான நேரத்தில் போட்டு உடைத்து பிரச்சனை செய்வார். இதில் பூர்ணிமா தான் அதிக முறை மாட்டியிருக்கிறார். அந்த வகையில் தோசையை திருப்பி போட்டது போல் விஷ்ணுவே தற்போது சிக்கி இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.