ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரிலீஸுக்கு முன்னரே பல கோடி லாபம் பார்த்த தளபதியின் வாரிசு.. தட்டி தூக்கிய பிரபல சேனல்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வாரிசு படத்தின் டெலிவிஷன் உரிமையை பிரபல சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. வழக்கமாக விஜய் படம் என்றாலே சன் டிவி தான் அதன் உரிமையை கைப்பற்றும்.

ஏனென்றால் சன் டிவியில் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் பண்டிகை நாட்களில் விஜய் படங்கள் ஒளிபரப்பாகும் போது சன் டிவியின் டிஆர்பியும் எக்கச்சக்கமாக இருக்கும். இதனாலேயே சன் டிவி தொடர்ந்து விஜய் படங்களை வாங்கி ஒளிபரப்பி வருகிறது.

அதன் அடிப்படையில் சன் நிறுவனம் இந்த திரைப்படத்தை 25 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கிக் கொண்டிருக்கும் அமேசான் நிறுவனம் தற்போது வாரிசு திரைப்படத்தை கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

ரிலீசுக்கு முன்னரே வாரிசு திரைப்படம் இத்தனை கோடி வியாபாரம் செய்யப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் படம் வெளிவந்த பிறகு பல மடங்கு வசூலை வாரி குவிக்கும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News