விஜய் மேனேஜர் ஜெகதீஷ் செய்யும் சித்து வேலை.. செம கடுப்பில் தளபதி

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகளுக்கு மேனேஜராக இருப்பவர் தான் ஜெகதீஷ். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். அந்த படத்தின் போதே விஜய்க்கும் ஜெகதீஷுக்கும் இடையில் பஞ்சாயத்து ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து விஜய் ஜெகதீசை நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் அதன் பிறகு விஜய்யின் மேலாளராக அவரே தொடர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா போன்ற பலருக்கும் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதனால் விஜய் ஏற்கனவே கொஞ்சம் சங்கடத்திலிருந்த நிலையில் தற்போது மேலும் விஜய்யை கடுப்பேற்றி உள்ளாராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை மிக பிரபலமாக மாறியுள்ளவர் அஸ்வின் குமார். இவர் கடந்த சில வருடங்களாகவே யூடியூபில் ஆல்பம் பாடல்களுக்கு நடித்து வந்த நிலையில் விஜய் டிவி ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதைப் பயன்படுத்தி அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். அதில் வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை எடுத்த கிருத்திகா உதயநிதி என்பவர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அடுத்த படத்தை எடுக்க உள்ளதாகவும், அதில் ஹீரோவாக அஸ்வின் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ஜெகதீஷ் தான் எனவும், இனிமேல் அஸ்வினின் மேனேஜரும் அவர்தான் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது இந்த விஷயம் விஜய்யின் காதுக்கு போக செம டென்ஷனாகி விட்டாராம். ஏற்கனவே இதேபோல் பிரச்சனையில் தான் விஜய்க்கும் ஜெகதீஷுக்கும் இடையில் சின்ன மனக் கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மீண்டும் அதே வேலையை செய்ததால் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார் விஜய்.

இது எல்லாம் முன்னணி நடிகர்களுக்குமே இருக்கும் பிரச்சனை தான். பெரிய நடிகர்களுக்கு தனியாக ஒரு மேனேஜர் இருக்கிறார் என்று சொன்னாலே அது ஒரு கர்வமாக இருக்கும். அப்போதுதான் அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வருமாம். ஆனால் ஜெகதீஸ் இப்படி விஜய்க்கும் சரி மற்றவர்களுக்கும் சரி ஒரே நேரத்தில் மேனேஜராக இருந்தால் விஜய்யும் சராசரி சாதாரண நடிகரை போல் மாறி விடுவாரே என்ற வருத்தம்தானாம் தளபதிக்கு. தற்போதைக்கு கோலிவுட் முழுக்க இந்த பேச்சுதான். ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

vijay-jagadeesh-cinemapettai
vijay-jagadeesh-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்