சன் டிவி டிஆர்பி- யை காலி பண்ண விஜய் டிவி போட்ட தந்திரம்.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளிவந்த 5 சீரியல்களின் கதை

Vijay TV Promo: சன் டிவி சீரியலுக்கு என்னதான் மக்கள் பேராதரவு கொடுத்து வந்தாலும் விஜய் டிவி தான் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி நிகழ்ச்சியையும் சீரியல்களையும் இறக்குகிறார்கள். அந்த வகையில் எப்படியாவது சன் டிவியின் டிஆர்பி-யை காலி பண்ண வேண்டும் என்று விஜய் டிவி ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்துகிறது. தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் 5 சீரியல்களின் பிரமோ வெளியாயிருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

மகாநதி: விஜய்க்கும் காவிரிக்கும் பிடிக்காமல் திருமணம் நடந்தாலும் தற்போது ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இவர்களுடைய கல்யாணத்தை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யின் தாத்தா போட்ட பிளான் தான் தாலி பெருக்கு பங்க்ஷன்.

தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து விஜய்க்கும் காவிரிக்கும் தாலி பெருக்கும் பங்க்ஷன் வைக்கப் போகிறார்கள். இதில் எதிர்பார்க்காத விதமாக காவிரியின் அக்கா கங்கா ஃபங்ஷனில் கலந்து கொண்டு காவிரியை ஆசீர்வாதம் பண்ணி அன்பையும் பாசத்தையும் கொட்டுகிறார். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: பாண்டியனின் மகன்களை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டால் சரவணனுக்கு கல்யாணம் நடக்காது நின்றுவிடும் என்று ராஜியின் அப்பா சதி திட்டம் தீட்டினார். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் ராஜி, அண்ணனுக்கு எதிராக சாட்சி சொல்லி கேசை வாபஸ் வாங்க வைத்து விட்டார். தற்போது தன்னுடைய வாக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக ராஜி முழுமையாக மாறி கதிரை புரிந்து கொண்டார்.

டாப் இடத்தில் இருக்கும் சிறகடிக்கும் ஆசை

சிறகடிக்கும் ஆசை: முத்துவை கூப்பிட்டு ஜீவா பார்லருக்கு போக வேண்டும் என்று சொல்கிறார். உடனே முத்து, ரோகிணி பார்லரில் இறக்கிவிட்டு கிளம்பி விடுகிறார். உள்ளே போன ஜீவாவை பார்த்ததும் ரோகிணி, மனோஜ்க்கு போன் பண்ணி தகவலை சொல்லுகிறார். உடனே மனோஜ் பார்லருக்கு வந்து ஜீவாவை மிரட்டுகிறார். அத்துடன் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விசாரிப்பதற்காக அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விட்டார்கள்.

இந்த சூழலில் மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். எதற்காக என்றால் நோ பார்க்கிங்கில் பைக்கை விட்டதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு பைக்கை எடுத்துட்டு வந்து விட்டார்கள். இந்த தகவலை மீனா, முத்துவுக்கு சொல்லி முத்துவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார். தற்போது ஜீவா ரோகினி இடம் சிக்க போகிறாரா அல்லது முத்துவிடம் மாட்ட போகிறாரா என்பது தான் பரபரப்பான திருப்பங்களாக அமைந்து வருகிறது.

பாக்கியலட்சுமி: ஒரு பக்கம் பழனிச்சாமி வெறித்தனமாக பாக்யாவை காதலித்து வருகிறார். இன்னொரு பக்கம் கோபியால் கர்ப்பமாகி அதை வெளியே சொல்ல முடியாமல் ராதிகா தவித்து வருகிறார். இந்த நிலையில் பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளையும் ராதிகா சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியா எடுக்கப் போகும் முடிவு பழனிச்சாமி காதலுக்கு சாதகமாக அமையுமா? அல்லது ராதிகாவுக்கு வேலைக்காரியாக மாறப்போகிறாரா? என்பதுதான் அடுத்த கட்ட கதையாக நகரப் போகிறது.

ஆஹா கல்யாணம்: ஐஸ்வர்யா பண்ணின அட்டூழியத்துக்கு மகா கன்னத்தில் பளார் என்று அறைந்து இனி உனக்கு மாமியாரும் நான் தான். அக்காவும் நான் தான் என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். அத்துடன் இதுவரை பயந்து அடங்கிய மகா தற்போது அனைவருக்கும் உண்மை தெரிந்து விட்டதால் ஆக்ரோஷமாக மாறிவிட்டார். அது மட்டும் இல்லாமல் இனி ஐஸ்வர்யாவால் இந்த குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று புகுந்த வீட்டுக்காக குலசாமி போல் நிற்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்