புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

சன் டிவி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீரியல் என்றாலே ஆரம்பத்தில் சன் டிவி தொடர்கள்தான். சித்தி, மெட்டி ஒலி, திருமதி செல்வம் போன்ற பல வெற்றிகரமான தொடர்கள் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால் மிக குறுகிய காலத்திலேயே வந்த தனது ஆதிக்கத்தை பெற்ற தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் புதுவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை கவர்ந்தது. இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது சின்னத்திரை தொடர்களையும் இறக்கி நல்ல டிஆர்பி யை பெற்ற வருகிறது.

Also Read :பாரதியை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்ட கண்ணம்மா.. இதுதானா உடன்கட்டை ஏறுதலா?.

மேலும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், நீயா நானா, பிக் பாஸ் என்று பிரபல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. ஆனால் டிஆர்பியில் சன் டிவி முதல் இடத்தையும் விஜய் டிவி இரண்டாவது இடத்தையும் தொடர்ந்து பெற்று வருகிறது. இதனால் தற்போது ஒரு பக்கா பிளான் போட்டுள்ளது விஜய் டிவி.

அதாவது சன் டிவி குழுமம் சன் நியூஸ், சன் மியூசிக், சுட்டி டிவி என இதை சார்ந்த பல சேனல்களை கொண்டுள்ளது. ஆனால் விஜய் டிவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் மியூசிக் என்ற ஒரு சேனலை மட்டும் தொடங்கி இருந்தனர். தற்போது இளைஞர்களை கவரும் விதமாக புதிய சேனல் ஒன்றை தொடங்க உள்ளது.

Also Read :பெரிய பிரச்சனையை கிளப்பி விட்ட சக்களத்தி.. பதிலடி கொடுத்த மருமகள்

விஜய் டக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலின் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளைஞர்களுக்கு சம்பந்தமான விளையாட்டு, அறிவுத்திறன், ரியாலிட்டி ஷோ போன்று ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. இந்த சேனல் மிக விரைவில் தொடங்க உள்ளது.

இந்த விஜய் டக்கர் சேனல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கவனத்தைப் பெற்றால் சன் டிவியின் டிஆர்பி குறைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் எப்படியும் விஜய் டிவி முதல் இடத்தை பிடித்துவிடும். இதை கருத்தில் கொண்டு விஜய் டிவி மும்மரமாக செயல்பட்டு வருகிறது.

Also Read :பிக் பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 300 எபிசோடுகளிலேயே மூட்டை கட்டிய இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்