பிக்பாஸ் வருகையால் முக்கியமான 2 சீரியலை நிறுத்தி வைத்த விஜய் டிவி.. கும்பிடு போட்டு வரவேற்ற கணவன்மார்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் செந்தூரப்பூவே. இதில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடிகர் ரஞ்சித்தின் மனைவியான பிரியாராமன் சில நாட்களுக்கு முன்னர் இணைந்து நடித்து வருகிறார்.

தற்பொழுது இந்த சீரியல் 3 மாதங்களுக்கு நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 5 இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதால் விஜய் டிவி சீரியல் ஒளிபரப்பு நேரத்தை மாற்றி வருகிறது.

செந்தூரப்பூவே சீரியலுக்கான நேரம் கிடைக்காத காரணத்தினால் இந்த சீரியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிகிறது. பிக்பாஸ் முடிந்த பின்பு இந்த சீரியல் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடரும் என்ற செய்தி தற்பொழுது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

இதேபோல் தொகுப்பாளினி ஜாக்லின் நடிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தேன்மொழி பி ஏ சீரியல் முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பிக் பாஸ் வருகையால் முக்கியமான சீரியல்களை நிறுத்தி வைக்கப்பட்டு வருவதால் விஜய் டிவியின் மீது இல்லத்தரசிகளுக்கு கோபம்தான் வருகிறது.

senthoora-poovey
senthoora-poovey

ஆனால் இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கணவன்மார்கள் கும்பிடு போட்டு வரவேற்ற வருகின்றன. பிக்பாஸ் ரசிகர்கள் கமலஹாசனை தொலைக்காட்சியில் நேரடியாக பார்ப்பதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.