வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நா இல்லாட்டாலும், அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க.. விஜய் டிவி நடிகை பகீர் பேட்டி

வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகள் தற்போது வெளிப்படையாக அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் அதிகமாக சின்னத்திரையில் நடிகைகளின் தற்கொலைக்கு காரணம் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைதான் என்று கூறப்பட்டு வருகிறது.

விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இதுபற்றி பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்த செந்தூரப்பூவே என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

செந்தூரப்பூவே தொடர் முடிந்த பிறகு தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி சமீபத்தில் பேட்டி ஒன்றை இதுகுறித்த பேசியுள்ளார். அதாவது நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அதாவது அந்த வயதிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது ஒருவர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கூறி உள்ளார். அப்போது அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாத வயது.

என் அம்மா அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் காபிக்கு பதிலாக டீ, தங்குவதற்கு இடம் போன்றவற்றில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்பதாக நினைத்துக் கொண்ட சரி என்றார். ஆனால் அட்ஜஸ்ட் இல்லை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அழுத்தி சொன்னார்கள்.

மேலும், நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களின் அம்மா அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்கூட போதும் என்று கூறினார்கள் என்று பகீர் தகவலை ஸ்ரீநிதி கூறியுள்ளார். சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் அவர்களது குடும்பத்தையும் இது பாதிக்கிறது என இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News