விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு தாவிய சீரியல் நடிகை.. போச்சு டிஆர்பி!

சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்துவதற்கென்றே சேனல்கள் வரிசையாக புதுபுது சீரியல்களை நெருக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையாக சீரியல்களை ஒளிபரப்ப உள்ளனர்.

சமீபத்தில் விஜய் டிவியில் முத்தழகு என்ற புது சீரியல் துவங்கப்பட்டு விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ள புது சீரியலின் அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புது சீரியலில், விஜய் டிவியின் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்த தேஜஸ்வினி நடிக்கவுள்ளார். எனவே தேஜஸ்வினி நடிக்க உள்ள இந்தப் புது சீரியலில் யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அத்துடன் இந்த சீரியலை குறித்த முழு விவரம் அடங்கிய ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஜீ தமிழில் ‘பேரன்பு’, ‘தெய்வம் தந்த பூவே’ என்ற இரண்டு புத்தம் புது சீரியல் துவங்கப்பட்ட நிலையை மீண்டும் தேஜஸ்வினியின் மற்றொரு சீரியல் தொடங்கப்பட உள்ளது.

அத்துடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் கதாநாயகியாக நடிக்க உள்ள புது சீரியலும் ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்ற தகவல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு வரிசையாக புத்தம்புது சீரியல்களை ஜீ தமிழ் தரையிறக்கி ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் ஜீ தமிழ் போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை