Vijay Tv Serial: வருஷம் முழுவதும் உழைத்தாலும் கஷ்டப்பட்டதற்கு பலனாக ஒரு விஷயம் கிடைத்தால் தான் அடுத்து தொடர்ந்து நிக்காமல் ஓடுவதற்கு ஒரு ஊக்குவித்தலாக இருக்கும். அப்படித்தான் சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களை பாராட்டும் விதமாக வருஷத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு விருது கொடுத்து கௌரவப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு விஜய் டிவி 9 விஜய் டெலிவிஷன் விருதை கொடுத்து வருகிறார்கள்.
இதில் ஒவ்வொரு ஆர்டிஸ்டிகளையும் கௌரவிக்கும் விதமாக விருதுகளை கொடுக்கிறார்கள். ஆனாலும் முக்கியமான எல்லா விருதையும் தட்டிப் பறித்தது ஒரே ஒரு சீரியல்தான். இந்த ஒரு சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்திற்குள் மாற்றி மாற்றி வருகிறது. அந்த வகையில் மக்களின் பேவரைட் சீரியலாகவும் இந்த நாடகம் இடம் பிடித்ததால் இதற்கு அதிக முக்கியத்துவம் விஜய் டிவி கொடுத்து வருகிறது.
அதிக விருதுகளை தட்டி பறித்த விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியல்
அதற்கு முக்கிய காரணம் கதாநாயகனாக நடிக்கும் முத்து என்கிற வெற்றி வசந்த். எத்தனையோ சீரியல்கள் இருந்தாலும் சிறகடிக்கும் ஆசை சீரியலுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான ஒரு இடம் இருக்கிறது. அந்த வகையில் பெஸ்ட் ஹீரோ விருதை வெற்றி வசந்த் வாங்கி இருக்கிறார். பெஸ்ட் பாட்டி விருதையும் முத்துவின் பாட்டியாக இருக்கும் ரேவதி பெற்றிருக்கிறார்.
பெஸ்ட் மாமனார் விருது அண்ணாமலை கேரக்டரில் நடிக்கும் சுந்தர்ராஜன் பெறுகிறார். அதே மாதிரி பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விருதை ரோகிணி கைப்பற்றுகிறார். அத்துடன் பெஸ்ட் டைரக்டர் அவார்டு சிறகடிக்கும் ஆசை சீரியலின் இயக்குனருக்கு கிடைக்கிறது. இதெல்லாம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு விஷயமாக பார்க்கப்படுகிறது பெஸ்ட் மாமியார் என்று சொல்லும் பொழுது விஜய் டிவியில் ஞாபகத்துக்கு வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் கோமதி என்கிற நிரோஷா தான்.
ஒரு சிறந்த மாமியார் எப்படி இருக்க வேண்டும், மருமகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மகன்களிடம் எந்த அளவிற்கு அன்புடனும் பாசத்தையும் காட்ட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக நிரோஷா என்கிற கோமதி நடித்து வருகிறார். ஆனால் இவரை டம்மி ஆக்கி சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடித்து வரும் விஜயாவிற்கு சிறந்த மாமியார் விருது கிடைத்திருப்பது சரியில்லை என்று மக்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
எப்படி இவர் சிறந்த மாமியாராக இருக்க முடியும் மீனாவை வேலைக்காரி மாதிரியும், பணம் இருக்கிறது என்பதற்காக சுருதி மற்றும் ரோகினியை தலையில் தூக்கி வைத்து ஆடும் இவர் எப்படி சிறந்த மாமியார் விருதை வாங்க முடியும் என்று கலாய்த்து வரும் அளவிற்கு ஒரு தலை பட்சமாக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதனால் எப்பொழுதுமே சிறந்த மாமியார் என்கிற விருது எங்கள் மனதில் கோமதிக்கு மட்டும்தான் உண்டு என்று பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அத்துடன் இந்த வருஷத்தில் அதிக விருதை தட்டி பறித்ததும் சிறகடிக்கும் ஆசை சீரியல் தான்.
- ரோகினியை தவிக்க விடும் முத்து மீனா
- க்ரிஷை தத்தெடுக்க சம்மதம் கொடுத்த கல்யாணி அம்மா
- ரொமான்ஸை தூக்கலாக போட்டு ரோகிணி டிராக்கை மறைக்கும் சிறகடிக்க ஆசை