பிக்பாஸுக்கு இணையாக இன்னொரு ஷோவை களமிறக்கும் விஜய் டிவி.. அனல்பறக்க போகும் டிஆர்பி

மாஸ்டர் செஃப், பிக்பாஸ், சர்வைவர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு டஃப்  கொடுக்கும் ரியாலிட்டி ஷோ தான் ‘குக் வித் கோமாளி’. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ்க்கு அடுத்தபடியாக டி ஆர்பியை அதிகம் பெற்றது குக் வித் கோமாளி. இதில் கோமாளிகளை வைத்து சமைக்கும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஷோ சீசன் 1, 2 என்று வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான நிலையில், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சீசன் 3 கூடிய விரைவில் வரவிருக்கிறது. இந்த குக்  வித் கோமாளி3 ரியாலிட்டி ஷோ நவம்பர் மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 சீசன்களையும் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக விளங்கினர். முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர்.

CWK-cinemapettai

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளும் பிரபலங்களும், குக்களும் ரசிகர்களிடையே பிரபலமாகி வெள்ளித்திரை வரை கலக்கி வருகின்றனர்.

இன்னிலையில் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் வரும் நவம்பர் மாதம் துவங்கப்பட உள்ளதால், பிக் பாஸ் இணையாக குக் வித் கோமாளியும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் ஒளிபரப்பு செய்யப்படுவதை தொடர்ந்து அதற்கு அடுத்த மாதம் நவம்பரில் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் துவங்குவதால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகிற போகிறது என்பதே அனைவரின் கணிப்பாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்