வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸில் கலந்து கொள்ளும் விஜய் டிவி தொகுப்பாளர்.. அப்போ கண்டெண்டுக்கு பஞ்சம் இருக்காது

Vijay Tv: விஜய் டிவியில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிவு அடைந்தவுடன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது படங்களில் பிசியாக இருப்பதால் அவரால் இதை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

எப்போதுமே விஜய் டிவி பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம் தான். அந்த வகையில் பிரியங்கா, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் கடந்த சீசன்களில் பங்கு பெற்றிருந்தனர். இந்த முறையும் விஜய் டிவி தொகுப்பாளர் ஒருவர் பங்கு பெற இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவி தொகுப்பாளர்

அதாவது விஜய் டிவியின் தொடக்கமான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தீபக். இவர் சின்னத்திரை தொடர்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல், விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் போன்ற தொடர்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

ஒரு சில படங்களில் கதாநாயகன் ஆகவும் நடித்த தீபக் இப்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளார். சாதாரணமாகவே கன்டென்டுகளை வாரி இறைக்கும் தீபக் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் சொல்லவா வேண்டும். கண்டிப்பாக என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சம் இருக்காது.

பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகனாக நடித்த அருண், தயாரிப்பாளர் ரவீந்தர், டிடிஎஃப் வாசன் போன்ற பிரபலங்களும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இதற்கான ப்ரோமோவும் வெளியாக உள்ளது.

களைகட்ட போகும் பிக் பாஸ்

- Advertisement -

Trending News