குக் வித் கோமாளியின் சீசன்3ல் பங்கேற்பேன்.. உறுதிப்படுத்திய விஜய் டிவி பிரபலம்!

விஜய் டிவியில் சீரியல்களை விட பலவிதமான கன்டென்ட்களை கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் குக் வித் கோமாளி என்கிற சமையல் கலை சார்ந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி சிவாங்கி, தற்போது வரவிருக்கும் குக் வித் கோமாளியின் சீசன்3இல் தான் கோமாளியாகவே பங்குபெற உள்ளதை உறுதி செய்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சிவாங்கி அதனை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகே நன்கு பிரபலமடைந்தார்.

சிவாங்கியின் இயல்பான பேச்சினால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். வலைதளங்களில் இவரின் அனைத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது. அன்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கார்த்திக் தேவராஜின் யூட்டுயூப் பாடலில் நடித்துள்ளார்.

நோ நோ நோ என்று அந்த பாடலின் வரிகள் தொடங்குகின்றன. இவர் நடித்துள்ள இந்த பாடல் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் டான் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன், அவரை சுற்றி இருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்து பார்ப்பவர் என்று கூறியுள்ளார்.

அத்துடன் குக் வித் கோமாளி சீசன் மூன்றில் மறுபடியும் கோமாளியாகவே இவர் பங்கேற்க உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார் சிவாங்கி. இதனால் இவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மெகா ஹிட்டாக ஓடியிருக்கிறது. வரவிருக்கும் இந்த சீசனை ரசிகர்கள் ஆரம்பம் முதலே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வரவிருக்கும் இந்த சீசன் நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனும் டிஆர்பி ரேட்டிங்கை அதிகம் அள்ளும் என்று கூறப்படுகிறது. வருகின்ற சீசனில் குக்களாகவும், கோமாளிகளாகவும் பங்கேற்கப் போகும் போட்டியாளர்களை அறிவதில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்