தாலியை கழட்டிய குக் வித் கோமாளி பிரபலம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனி. இவர் காதல் கோட்டை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள் ஆவார்.

தனது எதார்த்தமான பேச்சாலும், சமையல் திறமையாலும் நடுவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் கனி. குக் வித் கோமாளியின் போட்டியாளர்கள் பலருக்கும் பிடித்தவருமான கனிதான் அந்த சீசனில் டைட்டிலை வென்றார்.

தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் கனி நேற்று தனது ரசிகர்களுடன் லைவ் மூலம் உரையாடினார். அப்போது சிலர் நீங்கள் ஏன் தாலி அணிவதில்லை என கேட்டனர். அதற்கு பதிலளித்த கனி, “தாலி அணிவது தமிழர் கலாச்சாரத்துல இல்லாத ஒரு விஷயம். இடையில் புகுத்தப்பட்ட ஒன்று எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை”.

மேலும் “என் திருமணம் தாலிக்கட்டிதான் நிகழ்ந்தது. திருமணத்தின் போது கட்டிய மொத்தமான மஞ்சள் கயிறு தாலி எனக்கு பிடித்திருந்ததால் நான் அதை அணிந்துக்கொண்டேன். பின்னர் அந்த தாலியை வேறு ஒருவர் மாற்றி கட்டியவுடன் அதன் மீதான நம்பிக்கை தற்போது இல்லை” என கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி “என் கணவன் எனக்கு கட்டிய தாலியை நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். அதுதான் எனக்கானது வேறு ஒருவர் மாற்றி கட்டிய தாலியை நான் ஏன் அணிய வேண்டும்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.

எனது கணவருடன் 8 வருட காதல் மற்றும் 12 வருட திருமண வாழ்க்கை என சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒருவர் தாலியை வைத்து அவரின் குணங்களை அடையாளப்படுத்துவது தவறு.

எங்கள் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக குழந்தை உள்ளது. இதைவிட வேறு அடையாளம் வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். கனி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

- Advertisement -