சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரஞ்சித்துக்கு சூனியம் வைத்த ரவீந்தர்.. சூடு பிடிக்காத பிக்பாஸ் 8, Day 4

Biggboss 8 Day 4: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கூட முடியவில்லை. அதனால் பெரிய அளவில் கன்டன்ட்டை வீட்டுக்குள் பார்க்க முடியவில்லை. ஆனாலும் ரவீந்தர் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பிராங்க் என்ற பெயரில் ஒரு அளப்பரையை கூட்டினார்.

ஆனால் அது இறுதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கே ஆப்பாக முடிந்தது தான் ட்விஸ்ட். நான்காவது நாளான நேற்று பவித்ரா பிராங்க் சம்பவத்தால் பெண்கள் அணியிடம் மாட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தார். தீபக் அவருக்காக சப்போர்ட் செய்து ஆறுதல் சொன்னார்.

பின்னர் கேர்ள்ஸ் டீம் நூடுல்ஸ் பாக்கெட்டை காணும் என ஆண்கள் அணியோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஆண்கள் அணியும் ஏதோ தவறு செய்தது போல் இரண்டு பாக்கெட்டை திருப்பிக் கொடுத்து பிரச்சினையை முடித்தார்கள்.

அதையடுத்து இலுமினாட்டி பாடலோடு பொழுது விடிந்தது. பிறகு யார் இந்த வாரம் வீட்டை விட்டு போவார்கள் என்பதை சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சௌந்தர்யாக்கு தான் அதிக ஓட்டு விழுந்தது. அதேபோல் ரஞ்சித் பிராங்க் செய்து ஏமாற்றியதால் தன் அதிருப்தியையும் போட்டியாளர்கள் காட்டினார்கள்.

அந்த குற்ற உணர்ச்சியால் அவர் எல்லோரிடமும் சாரி கேட்டது தனி கதை. அதன் பிறகு மீண்டும் பெண்கள் அணி மளிகை பொருள் சண்டையை ஆரம்பித்தது. அதில் தர்ஷா விஷாலிடம் எங்களோட தேங்காய் பச்சை மிளகாய் எல்லாம் எதுக்கு திருடி வச்சிருக்கீங்க என வார்த்தையை விட்டார்.

குற்ற உணர்ச்சியில் தடுமாறிய ரஞ்சித்

அதனால் விஷால் சற்று குழம்பி போய் தெரியாமல் எடுத்து வச்சுட்டேனோ என்னமோ தெரியலையே என குற்ற உணர்ச்சியோடு பேசினார். ஆனாலும் தர்ஷா விடாமல் மல்லுக்கு நின்றார். அதன் பிறகு ஆண்கள் பிக் பாஸ் இடம் கெஞ்சி கூத்தாடி மளிகை லிஸ்ட்டை வாங்கினார்கள்.

அதன் பிறகு தான் சம்பவமே நடந்தது. ஏனென்றால் பெண்கள் அணி குற்றம் சாட்டிய எந்த பொருட்களும் அவர்களுடைய கிடையாது. ஆண்கள் அணி தான் அதை ஷாப்பிங் செய்தது அம்பலமானது. ஆனாலும் விடாத கேர்ள்ஸ் கூட்டம் நம்ம எடுத்த பொருளை அவங்க பேஸ்கெட்டில் போட்டிருப்போமோ என யோசித்தது.

தங்கள் பக்கம் குற்றம் இல்லை என நிரூபித்து விட்ட ஆண்கள் அணியும் இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டு விட்டார்கள். ஆனால் இந்த சண்டையை வைத்து பிக் பாஸ் 15 நிமிடத்தை ஓட்டிவிட்டார். அதை அடுத்து பட்டிமன்றம் டாஸ்க்கில் அம்மா அப்பா இருவரில் யார் சிறந்தவர் என்ற டாபிக் கொடுக்கப்பட்டது.

அதில் பெண்கள் அணி தான் வெற்றி பெற்றார்கள். டாஸ்க் முடிந்த பிறகும் கூட போட்டியாளர்கள் இதைப் பற்றி அவரவர் கருத்துக்களை பேசிக்கொண்டிருந்தனர். இதற்கிடையில் தர்ஷா கோட்டை தாண்ட வேண்டும் என்றால் சந்திரமுகி மாதிரி நடிக்க வேண்டும் என அர்ணவ் டாஸ்க் கொடுத்தார்.

அவரும் இப்ப பாரு என்னோட திறமைய என தலைமுடியை விரித்து போட்டு கண்ணை உருட்டி ஒதற வா ஒதறவா என காட்டுகத்தாக கத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் தான் கதறவா என மிரண்டு போனார்கள். ஐயோ முடியல சாமி.

இப்படியாக நேற்றைய நாள் ரொம்பவும் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்த நிலையில் இறுதியாக விஷால் வீட்டில் உள்ளவர்கள் போல் நடித்துக் காட்டி சுவாரஸ்யமாக்க முயன்றார். ஆனாலும் நேற்றைய தினம் சூர மொக்கை தான்.

- Advertisement -

Trending News