என் வாழ்க்கை, என் இஷ்டம்.. விவாகரத்து பற்றி டிடி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா.?

Vijay Tv DD: விஜய் டிவியின் மிகப்பெரும் பலமாகவும் தூணாகவும் இருப்பவர் தான் டிடி. தொகுப்பாளினி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இவர்தான்.

ஆனால் இவர் தற்போது இதிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் சந்தித்து வரும் சிக்கல்கள் தான்.

விவாகரத்து, உடல்நல பிரச்சனை, சர்ச்சை செய்திகள் என இவர் பல சவால்களை சந்தித்து வருகிறார். அதில் அவருடைய திருமண வாழ்க்கை பற்றிய பல கேள்விகளை ரசிகர்கள் எப்போதும் கேட்டு வருகின்றனர்.

சில காலம் தன் சொந்த வாழ்க்கை பற்றி அமைதி காத்து வந்த டிடி சில மாதங்களுக்கு முன்பு அதைப்பற்றி மனம் திறந்து உள்ளார். அதாவது திருமணம் என்பது வாழ்க்கையின் முடிவு கிடையாது.

டிடியின் விவாகரத்து சர்ச்சை

திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. அது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். எனக்கு அதில் சில கொள்கைகள் இருக்கிறது.

ஆனால் அவை அனைத்தும் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காது. விவாகரத்து என்று வந்தபோது நான் என்னுடைய சந்தோஷத்தை பற்றி மட்டுமே யோசித்தேன்.

ஒருமுறை நான் நடிகை ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுக்க தயாரான போது விவாகரத்து உறுதியானது தெரியவந்தது. அப்போது எனக்கு கஷ்டமாகத் தான் இருந்தது.

ஆனால் அதன் விளைவுகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இது என்னை விட எதிர் தரப்புக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

இருப்பினும் இது தான் வாழ்க்கையின் முடிவு என்று சொல்ல முடியாது என அவர் தெளிவாக குறிப்பிட்டார். ஆக மொத்தம் கஷ்டமோ நஷ்டமோ ஒவ்வொரு நிமிடத்தையும் என்ஜாய் செய்து வாழ்ந்து வரும் டிடியை பாராட்டி தான் ஆக வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்