இரண்டு பேரை கண்மூடித்தனமாக நம்பும் விஜய்.. இமையைக் காக்கும் கண்கள் போல் செயல்படும் செல்ல பிள்ளைகள்

பொதுவாகவே சினிமாவில் யாரும் யாரையும் எளிதாக நம்பி விட மாட்டார்கள்.  அப்படி இருக்கையில் விஜய் இரண்டு பேரை கண்மூடித்தனமாக நம்புகிறார். அதே மாதிரி அவர்கள் இரண்டு பேரும் விஜய்யின் முழு ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள்.  இவர்கள் இருவரும் நம்பிக்கையின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் தான் லலித்.  இவர் விஜய்யின் பினாமியாக கூட இருப்பார். தற்போது இளைய தளபதி விஜய், லியோ படபிடிப்பில் மிகவும் உற்சாகமாக செயல்பட்டு வருகிறார். இந்த படத்தை மறைமுகமாக விஜய் தயாரிக்கவும் செய்கிறார் என்று கூறுகின்றனர். அதற்கு பினாமியாக லலித் தான் முழு வேலையும் செய்து வருகிறார். இவரை விஜய் இன்று வரை முழுமையாக நம்புகிறார்.

Also read: லியோ உடன் மோதிப் பார்க்கத் தயாராகும் சஞ்சய் தத்.. இணையத்தை அலறவிடும் ஜிம் புகைப்படம்

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் அனைத்து சொத்துக்களையும் பராமரிக்கும் பொறுப்பில் லலித் இருக்கிறார். அத்துடன் விஜய்யின் கல்யாண மண்டபத்தை அவர்தான் எடுத்து நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து விஜய்க்கு பல சொத்துகளை அவர்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு தேவையான ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வருகிறார்.

இதுபோக இப்பொழுது விஜய்யின் மேனேஜராக செயல்படும் ஜெகதீசையும் விஜய் முழுமையாக நம்புகிறார். இவர்கள் இரண்டு பேரும் தான் விஜய்க்கு இரண்டு கண்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் இருந்தார்.

Also read: விஜய்க்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி.. ஒரே டயலாக்கை நம்பி ஏமாந்த தளபதி

அந்தப் படத்தின் போது விஜய்க்கும், ஜெகதீஷ்க்கும் இடையில் பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து விஜய், ஜெகதீசையை நீக்கி விட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் இவர் விஜய்க்கு மட்டுமில்லாமல் மற்ற சில நடிகர்களுக்கும் மேனேஜராக இருப்பதால் விஜய்க்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் மறுபடியும் விஜய், ஜெகதீஸை கண்மூடித்தனமாக நம்புகிறார். இப்பொழுது விஜய்யை, அவர்கள் இரண்டு பேரும் இமைக்காக்கும் கண்களைப் போல பார்த்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் விஜய்யின் செல்லப் பிள்ளைகள் என்றே கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் கூட நெருக்கமாக இருக்கிறார்கள்.

Also read: காஷ்மீர் குளிரால் நொந்து போன லியோ டீம்.. உறைய வைக்கும் பனியிலும் விஜய் செய்யும் அலப்பறைகள்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை