கடைசி பட இயக்குனரை டிக் அடித்த விஜய்.. சன் பிக்சர்ஸ் உடன் நடந்த ரகசிய மீட்டிங்

Vijay: விஜய் அரசியலில் இறங்கிவிட்டார் என்ற ஒரு விஷயம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தி வருகிறது. இவருக்கு வெற்றி நிச்சயம் என்று, ஒரு கூட்டம் பேர் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் எத்தனையோ நடிகர்கள் இப்படி இறங்கி ஒண்ணுமில்லாமல் போயிருக்கிறார்கள். அதில் பாவம் விஜய் சிக்கிடாமல் இருந்தால் சரி என்று பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு இடையில் விஜய்யின் ரசிகர்கள் அவருடைய படத்தை திரையில் பார்த்து குஷியாக வேண்டும் என்று அடுத்தடுத்த படங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆனாலும் இன்னும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவுமே வெளிவராமல் இருக்கிறது.

விஜய் அவருடைய 69 ஆவது படத்தை இந்த இயக்குனர்களுடன் நடிக்கலாம் என்று சில இயக்குனர்களின் லிஸ்ட் வெளியாகி வந்தது. ஆனால் விஜய் இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

ஏனென்றால் விஜய் நடிக்கும் கடைசி படமாகவும், அரசியல் ரீதியான கருத்துக்கள் இப்படத்தில் அதிகம் இருக்கும் என்பதால் தான். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான சில விஷயங்கள் சன் பிக்சர்ஸ் உடன் கடந்த வாரம் ரகசிய மீட்டிங் நடைபெற்று இருக்கிறது.

விஜய் படத்தின் அடுத்த இயக்குனர்

விஜய் அடுத்து நடிக்கப் போகும் படத்தின் இயக்குனர் யார் என்றால் உடன்பிறவா தம்பி அட்லியுடன் தான். அட்லி இயக்கப் போகும் படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடிப்பதற்கு அட்லியின் பாலிவுட் அண்ணனான ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது.

அந்த வகையில் ஷாருக்கானுக்கும், அட்லி மற்றும் விஜய் என்றால் டபுள் ஓகே என்று சம்மதத்தை கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் விஜய்யின் 69 ஆவது படம் கூடிய சீக்கிரத்தில் ஆரம்பமாகப் போகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவிப்பார்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை