விசுவின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகும் எஸ் ஏ சி.. கொல காண்டில் விஜய்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் தான் நடிகர் விஜய். ஆரம்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர் தான் இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர். ஏற்கனவே இவரின் செயல்கள் விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாக மட்டுமே அமைந்தது. இந்நிலையில் மேலும் அவரை கடுப்பேற்றுவதற்காகவே மீண்டும் ஒரு செயலை செய்துள்ளார்.

தற்பொழுது நடிகை ராதிகா சரத்குமார் தனது ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு மெகா ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த சித்தி சீரியல் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் ஒன்றாகவே உள்ளது. அதிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற காமெடி தொடர்களையும் எடுத்துள்ளார்.

Also Read: லியோ மட்டுமல்ல கைதி 2 ரிலீஸ் தேதியையும் முடிவு செய்த லோகேஷ்.. மீண்டும் மிரட்ட வரும் டில்லி

இந்நிலையில் கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிப்பதற்கு இயக்குனர் ஒருவர் புதிதாக களம் இறங்க உள்ளார். அப்பொழுது விசு நடிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் எனும் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

தற்பொழுது அந்த படத்தின் கதையை மையமாக வைத்து ஒரு புது சீரியலை தயாரிக்க உள்ளார். இவர் தயாரிக்கும் சீரியலுக்கு கிழக்கு வாசல் என்னும் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த சீரியலில் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடிய நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

Also Read: 20 தியேட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தில் துணிவா, வாரிசா.? ஆட்டநாயகனை உறுதி செய்த 25வது நாள்

அதிலும் படத்தில் விசு நடித்த அதே கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 70 மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் நடிகர் விஜய் டாப் ஹீரோக்களில் ஒருவராக வரவேண்டும் என்பதற்காகவே தனது படங்களின் மூலம் அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தார். 

இதனைத் தொடர்ந்து இவரின் வெற்றி நிறைவேறவை விஜய்க்கு இருக்கும் ரசிகர்களை வைத்து இவரை அரசியலில் ஈடுபடுத்த முயற்சி செய்து வந்தார். இந்த செயலானது இவர்களுக்குள் பெரிய பிளவையே உண்டாக்கி விட்டது. இப்பொழுது வரை இந்தப் பிரச்சனையானது ஒரு முடிவிற்கு வராத நிலையில் உள்ளது. இதனால் விஜய்யை அவமானப்படுத்துவதற்காகவே எஸ் ஏ சி அவர்கள் சின்னத்திரையின் மூலம் நடிக்க இருக்கிறார். இதனால் விஜய் தனது அப்பாவின் மீது கொல காண்டில் உள்ளாராம். இவை சினிமா வட்டாரத்தில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.

Also Read: 26 நாட்களை தாண்டியும் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு, துணிவு.. பின்னுக்கு தள்ளப்பட்ட மூன்று வார புதிய படங்கள்

- Advertisement -spot_img

Trending News