விஜய் சூப்பர் நடிகரும் இல்ல, ஸ்டாரும் இல்ல.. இவர்தான் சூப்பர்ஸ்டார்! புகைச்சலை கிளப்பிவிட்ட நடிகர்

இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர் என்பது சமீப காலமாக அவர் படங்களின் வசூலை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆனால் மலையாளத்தில் பிரபல நடிகர் ஒருவர் விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என கூறியது தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள பட நடிகர் சித்திக் ஒரு பேட்டியில்; ‘மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்றவர்கள் சூப்பர் ஸ்டார்கள் என கூறி வருகின்றனர். ஆனால் சற்று தமிழ் சினிமா மாறுபட்டது விஜய் ஒரு சிறந்த நடிகர் இல்லை ஆனால் விஜய்யை சூப்பர் ஸ்டார் என அனைவரும் அழைத்து வருகின்றனர். விஜய்க்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பட்டம் தான் அவரை அந்த இடத்திற்கு வைத்துள்ளது என சித்திக் கூறினார்.

மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என கமல்ஹாசனை மட்டுமே சொல்லலாம் என கூறியுள்ளார். மற்ற நடிகர்கள் யாரும் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

siddique
siddique

இதற்கு மற்றொரு மலையாள நடிகரான ஹரிஸ் பெராடி, ‘விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல தற்போதைய தலைமுறைக்கு சூப்பர் ஸ்டார் அவர்தான் என கூறியுள்ளார். மேலும் விஜய் ஒரு சிறந்த மனிதர் கூட என சித்திக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யை பற்றிப் புகழ்ந்து பேசிய தகவலை தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

harish-peradi
harish-peradi

இதற்கு பலரும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். அவரைப் போல தற்போது வரை எந்த ஒரு நடிகராலும் அனைத்து கதாபாத்திரம் ஏற்று நடித்து விட முடியாது.

மேலும் சிவாஜிகணேசனுக்கு பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்தது கமல்ஹாசன்தான் தவிர மற்ற எந்த ஒரு நடிகரும் இன்றுவரை நிரந்தரமாக தனது நடிப்பின் மூலம் இடத்தை பிடிக்க வில்லை என கமலுக்கு வக்காலத்து வாங்கி ஒரு கூட்டமும்,

விஜய்க்கு ஆதரவாக ஒரு கூட்டமும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். நடிகர்களே அடிச்சிக்கிட்டு இருக்கும்போது ரசிகர்களுக்கு மட்டும் என்ன?.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்