சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ஹீரோ.. பாலிவுட்டில் நடிகராக முத்திரை பதித்து வரும் விஜய் தம்பி

திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஹீரோக்கள் அனைவரும் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு வந்திருப்பவர்கள் தான். அதாவது அவர்கள் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பது, வில்லனாக நடிப்பது, கௌரவ தோற்றத்தில் வருவது போன்ற அனைத்து விதமான பரிமாணங்களிலும் நடித்த பின்னர் இப்பொழுது டாப் ஹீரோக்களாக இருக்கிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட நிலைமை இந்த காலத்தில் அமைவது சற்று கடினமாக இருக்கிறது. ஒரு நடிகர் இரண்டு, மூன்று படங்களில் நடித்த பின்னரும் அவர் நடிகராக அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அவர் அப்படியே இருக்க இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். அந்த மாதிரி தான் ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் ஓரளவுதான் பரிச்சயமாக இருக்க முடிகிறது.

Also read: 6 மாத குழந்தை அதியமானை அறிமுகப்படுத்திய மகத்.. செம க்யூட்டான பேபி

இவர் ஆரம்ப காலத்தில் உள்ள படங்களில் நல்ல மாஸ் ஹீரோக்களுடன் தான் நடித்து வந்திருக்கிறார். அதாவது மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் விஜய், அஜித் உடன் நடித்தவர் இளம் நடிகர் மகத். ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இவரை தமிழ் சினிமா வரவேற்கத் தவறியது.

அதற்கு காரணம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் அதிகமான சர்ச்சையில் சிக்கி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்றே சொல்லலாம். அதன்பின் இவரால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து நடிகராக வேண்டும் என்ற தீர்மானத்துடன் சுற்றிக் கொண்டு வருகிறார்.

Also read: பிறந்த குழந்தையுடன் எமோஷனல் புகைப்படம் வெளியிட்ட மகத்.. 1 மில்லியனை தொட போகும் லைக்ஸ்!

இதனைத் தொடர்ந்து இவர் மூன்று, நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டாராம். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியாது என்று நினைத்து இப்பொழுது பாலிவுட்டிற்கு சென்று ஒரு நல்ல நடிகராக முத்திரை பதிக்க வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறார்.

மேலும் இப்பொழுது ஹிந்தியில் அவர் நினைத்தது போல் நடிப்பை தெறிக்க விட்டு வருகிறார். ஹுமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா இவர்கள் நடிப்பில் வெளிவந்த “டபுள் எக்ஸ் எல்” படத்தில் மகத் பட்டையை கிளப்பி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் சாதிக்க முடியாததை பாலிவுட்டில் நடித்து சாதித்திருக்கிறார் விஜய்யின் தம்பி.

Also read: சிம்பு 31 கிலோ எடையை எதற்காக குறைத்தார் தெரியுமா? ரகசியத்தை உடைத்த மகத்