விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் 2 நடிகர்கள்.. ஒருத்தர் மாஸ், இன்னொருத்தர் பக்கா மாஸ்

விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தை வருகிற பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் அடுத்தது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் தளபதி ரசிகர்கள் இரட்டிப்பு மடங்கு உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இதுவரைக்கும் விஜய் நடிக்காத ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு இணையான ஒரு ஸ்டைலிஷ் நடிகரை வில்லனாக நடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு தெலுங்கில் இருக்கும் நடிகர்கள் பலரும் தற்போது போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் இவருடன் படத்தில் நடித்தால் அதன்பிறகு தனக்கென தனி வரவேற்பு இருக்கும் என்பதால் பல நடிகர்களும் தற்போது போட்டி போட்டு வருகின்றனர்.

nani-thalapathy66
nani-thalapathy66

மேலும் இயக்குனர் வம்சி படிபல்லி ஸ்டைலிஷ் நடிகராக இருப்பதை விட தற்போது மாஸ் நடிகராக இருப்பவர்களை விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார். முதலில் மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் மகேஷ் பாபு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை பின்பு நானிடம் வில்லனாக நடிக்க கேட்டுள்ளனர்.

இதுவரைக்கும் நானி தரப்பில் இருந்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் விஜய் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் முதலில் யார் சம்மதிக்கிறார்கலோஅவர்களுக்குத்தான் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தற்போது யார் முதலில் சம்மதிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் தற்போது 2 நடிகர்களுமே விஜயுடன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் நானி நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்