தலைவா படத்திற்கு பின் விஜய் எடுக்கப்போகும் ரிஸ்க்.. டபுள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகின்றன. அதனால் பல தயாரிப்பாளர்களும் விஜய்யை வைத்து படம் தயாரிப்பதற்கு வரிசையாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் தனக்கென ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை மிகப்பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது பீஸ்ட் படத்தினைப் பற்றிய அப்டேட் தொடர்ந்து படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில்கூட விஜய் துப்பாக்கியுடன் இருக்கும் புது போஸ்டரை ரிலீஸ் தேதியுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தளபதி விஜய் சமீபகாலமாக எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலேயே இருந்தார். காரணம் இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இதனால் இவருக்கு கிடைக்கும் நேரமும் குறைவாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய்க்கு சற்று விருப்பமில்லை. அதனாலேயே விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும் பீஸ்ட் படத்தின் அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். பல வருடங்களாக தொலைக்காட்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த விஜய் தற்போது பீஸ்ட் படத்திற்காக சன் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விஜய் கலந்து கொண்ட பேட்டி ஏப்ரல் 10ஆம் தேதியன்று சன்டிவி நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு விஜய் ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சியில் மூலம் பார்க்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியை 4 பாகங்களாக வெளியிட உள்ளனர், அதுவும் முதல் பாகத்தை பீஸ்ட் பட ரிலீஸுக்கு முன்னரும் மீதி இருக்கும் 3 பாகங்களை ரிலீசுக்கு பின்னும் வெளியிடுகின்றனர் சன் பிக்சர்ஸ்.