சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நடிகையின் ரசிகர்களால் ஓடாமல் போன விஜய் படம்.. இயக்குனரின் ஓப்பன் டாக்

Thalapathy Vijay: பிரபல நடிகை ஒருவரின் ரசிகர்களால் விஜய் படம் ஓடாமல் போனது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அப்படி ஒரு சம்பவத்தை தான் பகிர்ந்து இருக்கிறார் பிரபல இயக்குனர் ஒருவர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் உலகத்தின் கிங் மேக்கராக இருக்கிறார்.

அவர் படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஹீரோயின் யாராக இருந்தாலும் பரவாயில்லை விஜய் படமாக இருந்தால் போதும் என ஒரு கூட்டம் படம் பார்க்க காத்திருக்கிறது.

அப்படிப்பட்ட விஜய்க்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. விஜய் மற்றும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படம் தான் மின்சார கண்ணா. இந்த படத்தை இன்று டிவியில் போட்டாலும் ஒரு கூட்டம் ரசித்து பார்க்கும்.

இயக்குனரின் ஓப்பன் டாக்

அதிலும் இந்த படத்தில் வரும் உன் பெயர் சொல்ல ஆசைதான், ஊதா ஊதா ஊதா பூ போன்ற பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இன்று வரை இருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து குஷ்பூ, ரம்பா, மணிவண்ணன், மன்சூர் அலிகான் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மும்பை நடிகை ஒருவர் நடித்திருந்தார். இந்த நடிகையின் பெயர் மோனிகா கேஸ்டலினா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் ரொம்பவும் உறுதியாக இருந்து இந்த நடிகையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

மேலும் மின்சார கண்ணா படத்தில் நடிகை ரம்பா துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது விஜயை ஒரு தலையாக காதலித்து, அதன் பின்னர் விஜய் வேறொரு பெண்ணை காதலிக்கிறார் என தெரிந்ததும் விட்டுக் கொடுக்கும் கேரக்டர்.

ரம்பா அப்போது பெரிய பிரபலமாக இருந்த காலகட்டம். ரம்பாவுக்காக பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை துணைக்கதாநாயகியாக போட்டுவிட்டு, முகம் தெரியாத நடிகை ஒருவரை விஜய்க்கு ஜோடியாக போட்டதால் இந்த படம் வெற்றி பெறவில்லை என இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Trending News