விஜய்யிடம் கால்சீட் கேட்ட மகன் சஞ்சய்.. தயாரிப்பாளர் வேட்டையில் தளபதி!

தளபதி விஜய் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருவதால் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் தவம் கிடக்கின்றனர். இதில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சயும் ஒருவராம்.

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65 படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்திற்கான பேச்சுகள் தற்போதைய கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தளபதி விஜய் இயக்குனர் தேடிக் கொண்டிருப்பதை அறிந்த மகன் சஞ்சய், நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என விஜய்யிடம் கேட்டுள்ளாராம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் சினிமாவில் ஹாட் டாப்பிக்.

விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை சமீபத்திய பேட்டிகளில் பலரும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சஞ்சய் ஒரு குறும்படம் வேறு இயக்கி நடித்திருந்தார்.

தற்போது தளபதி விஜய்க்காக ஒரு அதிரடியான மாஸ் கதையை ரெடி செய்து வைத்துள்ளாராம். இது சம்பந்தமாக விஜய்யிடம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் தளபதி 66 படத்தின் இயக்குனர் பற்றிய சலசலப்பு இன்னும் அதிகமாகி விட்டதாம்.

vijay-cinemapettai-01
vijay-cinemapettai-01

சொல்ல முடியாது, திடீரென தளபதி விஜய் தன்னுடைய மகனுடன் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விஜய் வட்டாரங்கள். அதற்கான சரியான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சிறுத்தை சிக்கும், சிறு வண்டு சிக்காது என பல தயாரிப்பாளர்கள் ஜகா வாங்கிக் கொள்கிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்