விஜய்யை திரும்ப சுத்தி அடிக்கும் கர்மா.. என் வீட்டு கன்னுக்குட்டி, என் மார்பில் முட்டுதடி என புலம்பும் தளபதி

Vijay son Jason Sanjay directs new film: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் நடிப்பதில் விருப்பமில்லை எனவும் இயக்குனர் ஆவது தான் கனவு என்று கூறியிருந்தார். சினிமாவில் தன் மகன் வருவதை விரும்பாத விஜய் அவர்கள் டைரக்க்ஷன் தான் விருப்பம் என  கூறியதும் அசிஸ்டன்ட் டைரக்டராக சில காலம் பயிற்சி எடுத்துக் கொள் என்றார். இதையும் இவர் கண்டு கொள்ளாத மாதிரி தெரிகிறது.

திரைத்துறை சம்பந்தமாக வெளிநாடுகளில் படித்து பயிற்சி பெற்று திரும்பிய ஜேசன் சஞ்சய் அவர்கள், அவரது தாய் சங்கீதாவிடம் பேசி, பின் சங்கீதா தனது தந்தையின் மூலமாக லைக்கா நிறுவனத்திடம் பேசி பட வாய்ப்பு பெற்றுக் கொடுத்து உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது இதில் எதிலும் விஜய் சிறிதும் சம்பந்தம் இன்றி உள்ளார். ஜேசன் சஞ்சய் அவர்கள் முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் எடுக்கப் போவதில்லை என்றும் இளம் நாயகர்களுடன் கைகோர்க்க போவதாக அறிவித்தார்.

Also read: விஜய் செயலால் மரியாதை இல்லைன்னு எஸ்கேப் ஆன அஜித்.. ரஜினியை ஃபாலோ பண்ணும் ஏகே

அதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனுடன் பட ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்திட்ட புகைப்படத்துடன் போஸ் கொடுத்து உள்ளார். சுபாஷ்கரன் அவர்கள் ஜேசன் சஞ்சயை எங்கள் படத்தின் இயக்குனராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்று வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஜேசன் சஞ்சய் அவர்கள் இயக்கத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள படத்தின் பட பூஜையில் விஜய் கலந்து கொள்ளாததை அடுத்து அப்பாவின் பேச்சை கேட்காததால் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றும் ஜேசன் சஞ்சய் அவர்கள் பட பூஜைக்கு தனது தந்தையை அழைக்கவில்லை என்றும் பலவாறு கருத்துக்கள் பரவி வருகிறது.

விஜய் தனது தந்தை சந்திரசேகரின் பேச்சை கேட்காமல் எஸ் ஏ சி க்கு செய்ததை தன் மகன் திருப்பி செய்கிறான் என்ற கருத்து நிலவி வருகிறது. முடிவில் “என் வீட்டு கண்ணு குட்டி, என்னோட மல்லுக்கட்டி, என் மார்பில் முட்டுதடி கண்மணி” என்று விஜய் புலம்புவது போல் உள்ளது.

Also read: இயக்குனர் ஆகி அப்பாவுக்கே ஷாக் கொடுத்த ஜேசன் சஞ்சய்.. ஆனாலும் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல