விஜய் மகன் சஞ்சய்யை வைத்து கேப்மாரி 2.. எஸ் ஏ சந்திரசேகர் அதிரடி!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புரட்சி இயக்குனர் என தலையில் வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் இருக்கும் திரைப்படங்களைப் பார்த்து கழுவி ஊற்றி வருகின்றனர் என்பதுதான் வருத்தமான விஷயம்.

ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்தவர் தான் இசையை சந்திரசேகர். இசைக் கலைஞர் விஜயகாந்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் ரஜினி போன்றோரை வைத்து சமூகத்துக்கு தேவையான பல படங்களை அதிரடியான திரைக்கதை மூலம் கூறியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

என் தளபதி விஜய்க்கு அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீண்ட நாள் கழித்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் தான் கேப்மாரி.

முழுக்க முழுக்க அடல்ட் படமாக உருவாகி இருந்த கேப்மாரி படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அதுல்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பார்த்தால் கண் கூசும் கேட்டால் காது புளித்துப் போகும் அளவுக்கு முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த படமாக உருவானது.

இந்த படத்தை கழுவி ஊற்றாக விமர்சகர்களே கிடையாது. பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கு உள்ளான கேப்மாரி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

vijay-sanjay-cinemapettai
vijay-sanjay-cinemapettai

மேலும் அந்த படத்தில் தளபதி விஜய் மகன் சஞ்சய்யை நடிக்கவைக்க மிகவும் போராடி கொண்டிருக்கிறாராம் எஸ்ஏ சந்திரசேகர். ஆனால் விஜய் இப்படி ஒரு படத்தில் என் பையனை நடிக்க விடமாட்டேன் என கையெடுத்து கோடி கும்பிடு போட்டு விட்டாராம். என்ன சொன்னாலும் சரி, பேரனை வைத்து ஒரு படமாவது இயக்கி விடுவேன் என பலே திட்டம் போட்டுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகர்.

- Advertisement -