நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுக்காத விஜய்.. உம்முனும் கம்மனும் இருக்கும் த வெ க தளபதி

Vijay attitude: உசுப்பேத்தறவன் கிட்ட உம்மனும், கடுப்பேத்தறவன் கிட்ட கம்முனு இருக்கணும் இதுதான் விஜய்யின் ட்ரேட் மார்க் வசனம். குட்டிக்கதை சொல்லும்போது விஜய் இப்படி பேசி கைதட்டளை வாங்கினார். ஆனால் அது வெறும் மேடைப்பேச்சு மட்டுமே என்று இப்பொழுது புரிகிறது. மக்கள் பாதிக்கப்படும் எந்த ஒரு விஷயத்திற்கு எதிராகவும் இதுவரை விஜய் குரல் கொடுத்ததே கிடையாது.

மத்திய அரசு மருத்துவ நுழைவுத் தேர்வு அவசியமென “நீட்” என்னும் புதிய பரீட்சை வைக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. மே 5 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு நடைபெற்றது. அதிலிருந்து நல்ல தகுதி உடைய மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாக மாறியது.

கட் ஆப் எனப்படும் சிறிய அளவு பாகுபாட்டில் இந்த மருத்துவ படிப்பில் சேர முடியாமல் நிறைய தகுதியுள்ள மாணவர்கள் திணறி வருகின்றனர். பல இளம் திறமை வாய்ந்த மாணவர்கள் நம்மால் மருத்துவராக முடியவில்லை என அதிர்ச்சி தரும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். இதற்காக பல அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வந்தாலும் அந்த தேர்விற்கு தடை போட முடியவில்லை.

உம்முனும் கம்மனும் இருக்கும் த வெ க தளபதி

கடந்த வாரம் அஞ்சாமை என்னும் படம் வெளிவந்தது. விதார்த் நடிப்பில் எஸ்பி சுப்புராமன் இயக்கிய படம். நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் இன்னல்களை வெளிப்படையாக கூறும் கதை தான் இது. நீட் எழுதும் மாணவர்களின் மனநிலையை கெடுப்பது, ஏழை மாணவர்களை அந்த பக்கமே வரவிடாமல் தடுப்பது, இதுதான் படத்தின் கதை கரு. படம் மிக அருமையாக இருக்கிறது.

அஞ்சாமை படத்தை பார்த்த அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் டார்ச்சர்களையும், செய்யப்படும் அநியாயங்களை அவ்வளவு தத்ரூபமாக தோல் உரித்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தை பற்றி எந்த ஒரு அரசியல்வாதியும் ஒரு வார்த்தை பேசவில்லை.

புதிதாய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்துள்ளார் விஜய். இவர் காதுகளுக்கு இன்னும் அஞ்சாமை படத்தின் செய்தி சேரவில்லையா என்று தெரியவில்லை. படத்தைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். ஆனால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அஞ்சாமை படம் நன்றாக இருக்கிறது என இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

Next Story

- Advertisement -