திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நம்ப வச்சு ஏமாற்றிய வெற்றிமாறன்.. மேடையில் சிரிச்சுக்கிட்டே அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி

இதோ அதோ என்று இழுத்துக் கொண்டே வந்த விடுதலை திரைப்படம் ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகி விட்டது. வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உட்பட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மேடையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் விஜய் சேதுபதி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிரித்துக் கொண்டே வெற்றிமாறனை அசிங்கப்படுத்தி பேசினார். அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு என்னிடம் வெற்றிமாறன் எட்டு நாட்கள் மட்டுமே கால்சூட் கேட்டார். அதை நம்பி நானும் கொடுத்தேன். ஆனால் கடைசியில் மாதக்கணக்கில் அவர் இழுத்தடித்து விட்டார் என்று நக்கலாக கூறினார்.

Also read: விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

இந்த விஷயத்தை அவர் சிரித்துக் கொண்டே கூறினாலும் மனதில் இருக்கும் கோபத்தை தான் அவர் இப்படி வெளிகாட்டி விட்டார் என்பது தெளிவாகவே தெரிந்தது. மேலும் அடுத்த படத்திலும் வெற்றிமாறன் உடன் இணைவீர்களா என்று கேட்டதற்கு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்றும் கிண்டலாக கூறினார்.

இந்த விஷயம் தான் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கெஸ்ட் ரோல் என்று கூறிவிட்டு அதிக நாட்கள் இழுத்ததால் தான் விஜய் சேதுபதி இவ்வளவு கோபத்தையும் காட்டுகிறார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் பட குழுவினரை காட்டுக்குள் சூட்டிங் வைத்து ஒரு வழி ஆக்கிவிட்டார். அதனாலேயே பலரும் இதிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ரீதியில் கதறினார்கள்.

Also read: மேடையில் வைத்து வெற்றிமாறனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி.. வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட விரத்தி

அந்த ஆதங்கத்தை தான் விஜய் சேதுபதி மேடையில் சிரித்துக்கொண்டே கூறி இருக்கிறார். மேலும் படத்தின் டிரெய்லரை பார்த்த பலரும் இதை எங்கேயோ பார்த்தது போன்று இருக்கிறது என்றும் கூறுகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.

இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க இருக்கிறார். பல மாதங்களாக இப்படத்தை சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: தன் இனத்தை காப்பாற்ற போராடும் விஜய் சேதுபதி வாத்தியார்.. வெற்றிமாறனின் விடுதலை பார்ட் ஒன் ட்ரெய்லர்

- Advertisement -

Trending News