அநியாயத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி.. கையெடுத்துக் கும்பிட்ட தயாரிப்பாளர்

சமீபகாலமாக விஜய் சேதுபதி கேட்கும் சம்பளம் தான் தயாரிப்பாளர்கள் தலையில் இடியை போடுவது போல இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். அதற்கெல்லாம் காரணம் லோகேஷ் கனகராஜ் தான் என அவரை திட்டாத தயாரிப்பாளர்களே இல்லையாம்.

சும்மா இருந்த விஜய்சேதுபதியை நல்ல வில்லன் கதாபாத்திரம் கொடுத்து மாஸ்டர் படத்தில் நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் வெற்றியும் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரமும் மொழி கடந்தும் மற்ற ரசிகர்கள் ரசிக்கப்பட்டது.

அதன் விளைவு தற்போது வடக்கில் இருந்து தெற்கு வரை உள்ள அனைத்து மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும் 26 படங்களுக்கு ஒரே நேரத்தில் அட்வான்ஸ் வாங்கி குவித்து இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

இது எல்லாமே விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகுதான். ஆனால் விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக சமீபகாலமாக ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடித்தாலும் ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொள்ள சோலோ ஹீரோவாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் சமீபத்திய வளர்ச்சியை பார்த்த தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி விஜய் சேதுபதியை வைத்து ஒரு படமெடுக்க ஆசைப்பட்டு, கால்சீட் கேட்டு போன் செய்தாராம்.

அப்போது விஜய் சேதுபதி தனக்கு 15 கோடி சம்பளம் வேண்டும் என கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்பி சௌத்ரி, 15 கோடி சம்பளம் கொடுத்து உங்களை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு எங்கள் கம்பெனி உயர்ந்த பிறகு வருகிறேன் என கூறி போனை வைத்து விட்டாராம்.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai
- Advertisement -