விஜயகாந்த்தின் சூப்பர் ஹிட் 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி.. என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்த காலத்தில் அதிகமான படத்தில் நடித்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜய் சேதுபதி மட்டுமே. நடிக்க தொடங்கிய சில ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரது கைவசம் தற்போது ஏராளமான படங்கள் உள்ளன.

அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இது தவிர மாமனிதன், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தான் லாபம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் உதயகுமார், “லாபம் படத்தின் வெற்றி மூலம் ஜனநாதன் ஆத்மா சாந்தி அடையும் என்று நான் நம்புகிறேன். விஜய் சேதுபதி தம்பி ஒரு நடிகராக இல்லை நல்ல மனிதனாக வாழ்ந்து வருகிறார்.

ஒருமுறை நான் விஜய் சேதுபதியிடம் சின்ன கவுண்டர் 2 படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் இப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை என்று சொன்னார். அவருடைய கால்ஷீட்டுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஓகே சொன்னால் உடனடியாக சின்ன கவுண்டர் 2 படத்தை எடுப்பேன்” என கூறியுள்ளார்.

chinna-goundar
chinna-goundar

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத படம் என்றால் அதில் சின்னக்கவுண்டர் படமும் அடங்கும். இப்படத்தில் அந்த சமயத்தில் முன்னணி நடிகரான விஜயகாந்த், சுகன்யா, மனோரமா கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றியும் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே தங்கள் கற்பனை குதிரையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்