உலகநாயகனை ஓரம்கட்டிய விஜய் டிவி.. பிக்பாஸ்சை கோஸ்ட் செய்யப்போகும் மிரட்டல் ஹீரோ

விஜய் டிவியில் நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று அறிவித்தார். மேலும் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

இதற்கு அவசரமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் டிவி உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. இதனால் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கமல்ஹாசன் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு சில காலங்கள் ஆகும் என்ற படியால் விஜய் சேதுபதி அடுத்த சில வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகம் என்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

 

Sharing Is Caring:

அதிகம் படித்தவை