தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதி மட்டும் தான் கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ, கெஸ்ட் ரோல், வில்லன் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் உடனே ஓகே சொல்லி கமிட்டாகி விடுகிறார்.
இதனால் இவர் வருடத்திற்கு 12 திரைப்படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் மாதத்திற்கு ஒருமுறை இவருடைய திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டு இருக்கிறது. ஆனால் அப்படி இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் ரீச் ஆவதில்லை.
ஏனென்றால் துண்டு, துக்கடா கேரக்டராகவே இவர் நடிக்கிறார் என்ற ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதைப் பற்றி இப்போதுதான் விஜய் சேதுபதி உணர ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற படங்கள் சரியாக போகவில்லை.
இதைப் பற்றி யோசித்த விஜய் சேதுபதி இனிமேல் இந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். என்னதான் நிறைய படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை. இதனால் அவருக்கு இப்போது ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் திரைப்படம் பண்ண ஆசையாக இருக்கிறதாம்.
மாமனிதன் போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரம் மாதிரி இல்லாமல் இனிமேல் ஹீரோயிஸம் காட்டுவதற்கு அவர் முடிவு செய்துவிட்டாராம். அதனால் தன்னிடம் கதை சொல்ல அணுகும் இயக்குனர்களிடம் அவர் அது போன்று கதையாக இருந்தால் மட்டும் கேட்பதற்கு சம்மதிக்கிறாராம்.
எந்த கேரக்டராக இருந்தாலும் விஜய் சேதுபதி நடித்து விடுவார் என்று நம்பி வரும் இயக்குனர்கள் தற்போது ஏமாற்றத்தில் இருக்கின்றனர். மேலும் அவருக்கு ஏற்ற மாதிரி கதையை தயார் செய்யவும் சில இயக்குனர்கள் ரெடியாகி கொண்டிருக்கின்றனர். இப்படி அவருடைய படங்கள் ஓடாமல் அவருக்கு ஆபத்து வரும் வேளையில் இப்பவாவது சுதாரித்துக் கொண்டாரே என்று விஜய் சேதுபதியை பற்றி திரையுலகில் பேசி வருகின்றனர்.